Thursday, 22 May 2008

விமான பயண அனுபவங்கள்...பார்ட்-1

Starting my First Blog -- inspired by many experienced bloggers...

முதலில் என்னை ப்ளோக் எழுத தூண்டிய கிரி , துளசி கோபால், வற்றாயிருப்பு சுந்தர் ஏனைய சக பதிவர்களுக்கு நன்றி...

விமான பயணத்தின் போது மகா கொடுமையான , சகித்துக்கொள்ள முடியாத விஷயங்கள்..

  1. குளிக்காமல் வந்து, பக்கத்தில் உள்ள passenger பற்றி கவலைப்படாமல் லுங்கி உடுத்திக்கொண்டும், அக்குளை தூக்கிக்கொண்டு மணக்க மணக்க தூங்குவது..மேலே சரிவது...
  2. விமான பணிப்பெண்களை விடாமல் "சரக்குக்காக" நச்சரிப்பது... நொங்கு எடுப்பது..
  3. தராதரம் இல்லாத luggage (புண்ணாக்கு வைக்கும் பை, அட்டை பெட்டி, சமாசாரங்கள்) ஐ Hand luggage ஆக கொண்டு வருவது..
  4. மைக்கே இல்லாமல், லவுட் ஸ்பீக்கர் effect கொடுத்து பேசுவது...
  5. ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு பிளைட்டுக்கே சொந்தக்காரன் போல பந்தா காட்டுவது..(முக்கியமாக North Indians)
  6. பிளைட் கக்கூசை மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக்கொண்டு அடிக்கடி போய் நாஸ்தி செய்வது..
  7. பக்கி போல விமான பணிப்பெண்கள் கொண்டு செல்வதை எல்லாம் வாங்கி உள்ளே தள்ளுவது...
  8. பிளைட் ஐ லோக்கல் டவுன் பஸ் போல நினைத்துக்கொண்டு துண்டு போடுதல், சவுண்டு கொடுத்தல்..
  9. வாங்கிய மொக்கை கேமரா வை வைத்துக்கொண்டு "ஏ மாப்ளே.. இங்க காமி"..அப்படி டயலாக் விட்டுக்கொண்டு..பிலிம் காட்டுதல்..
இன்னமும் உண்டு... பின்னாலே எழுதுறேன் !!

இது நான் பொதுவாக சிங்கை-சென்னை , கோலாலம்பூர் -சென்னை வழித்தட விமானங்களில் கண்டவை...

9 comments:

கிரி said...

வெங்கி கலக்கீட்டீங்க போங்க. என்னங்க இப்படி அதிரடியா இருக்கீங்க.. பேச்சு கிடையாது நாம வீச்சு தானு அடித்து தூள் பண்ணீட்டீங்க போங்க.

கைய்ய கொடுங்க மொதல்ல ... பட்டய கிளப்ப வாழ்த்துக்கள்

உங்களோட பழைய பதிவுகளையும் படித்தேன்.. ஆனா அதுல என்னால பின்னூட்டம் போட முடியல.. :( சூப்பரா இருந்துச்சுங்க.. நீங்க என் இவ்வளோ நாளா பதிவு போடாம விட்டீங்கன்னு எனக்கு தெரியல..

லேட் ஆக வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்து கலக்குங்க

அன்புடன்
கிரி

வெங்க்கி said...

நன்றி.. கிரி.. இந்த பயணத்தை மேலும் தொடர்வேன் !! உங்க சைட் ல ஒரு சின்ன லிங்க் குடுங்க எனக்கு..

துளசி கோபால் said...

வாழ்த்து(க்)கள்.

'வேணு' வாசிக்கும் புள்ளையார் ரொம்பப் பிடிச்சிருக்கு:-)

g said...

உன்னைப் பற்றி நீயே பெருமையா பதிவு போட்டுகிட்டா எப்படி? எங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கக்கூடாதா?

மங்களூர் சிவா said...

:))))

வடுவூர் குமார் said...

6...
நீங்கள் ஏன் அங்கு அடிக்கடி போகிறீர்கள்?? :-))

வெங்க்கி said...

//உன்னைப் பற்றி நீயே பெருமையா பதிவு போட்டுகிட்டா எப்படி? எங்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுக்கக்கூடாதா?
//

வாங்கோ..ஜிம்ஷா.. நான் அப்படி என்ன பெருமையா சொல்லிட்டேன் ? நீங்கள் பட்டதை விடவா... யாரும் சொல்லுரதில்ல.. நான் பதிவா போட்டுட்டேன்... எப்படி ? :))))))))
நீங்களும் கொஞ்சம் அள்ளி விடுங்க..உங்க அனுபவத்தை ..

நன்றி...மீண்டும் வாங்க மங்களூர் சிவா...

//நீங்கள் ஏன் அங்கு அடிக்கடி போகிறீர்கள்?? :-))//

வாங்க வடுவூர் குமார்..... ஒரு முறை AISLE seat ட்டுல.. தெரியாம boarding போட்டுட்டேன்.. உள்ளார seat ட்டுல உக்கார்த்திருந்த 2 பேர்... மாத்தி மாத்தி.. கக்கூசுக்கு போக..நான் 3 மணி நேரம் எழுந்து வழி விட்டது தான் மிச்சம்... இதே மாதிரி போனவாரம் சென்னை சென்ற போது.. எப்போடா பிளைட் டேக் ஆப் ஆகும்னு காத்திருந்து seat பெல்ட் சைன் சுவிட்ச் ஆப் செய்த பின்பு .. ஒரு கும்பல் சட்ட சபையில் வெளிநடப்பு செய்வது போல...குரூப் ஆக எழுந்து போய் கக்கூஸ் வாசலில் நின்று கொண்டது....

Samuthra Senthil said...

mFirst impression is the Best impression என்பதுபோல முதல் பதிவே வித்தியாசமாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியிருக்கிறீர்கள் கீ-வென். வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்...!

Samuthra Senthil said...

( நட்புடன் தனிமடல் ) : தாங்களது வலைப்பூவில் எத்தனை வாசகர்கள் வந்த சென்றிருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. Counter-ஐ இணைந்தால், எத்தனை வாசகர்கள் வந்து செல்கிறார்கள் என்ற விவரங்களை தெரிந்து கொள்வதுடன், எப்படிப்பட்ட பதிவுக்கு எவ்வளவு வாசகர்கள் வருகிறார்கள் என பல்ஸ் பார்த்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து.