Thursday, 21 August 2008

காக்கா கதை... புது மாதிரி..

இது எனக்கு e-மெயில் ல் வந்தது.. அனுப்பிய நண்பர் பாரிவேலனுக்கு நன்றி..


நான் ஏன் ஒலிம்பிக் க்குக்கு போகலை ?



இப்பிடி இருந்தா எப்பிடி ஒலிம்பிக் குக்கு அனுப்புவாங்க ? அதான் இந்தியாபோகலை.. :)

Thursday, 14 August 2008

அட்ரா அட்ரா.. நாக்க முக்க...டி.ஆர் முக்க...

டி. ஆர் நேர் காணல்.. இப்படி ஒண்ணு பாத்ததில்ல..




Wednesday, 30 July 2008

இளையராஜாவின் "மன்றம் வந்த " பாட்டு..ஜெர்மன் மொழியில்..

இசை ஞானி இளையராஜாவின்.."மன்றம் வந்த " பாடல் ஜெர்மன் மொழியில் காபி..

http://www.tubetamil.com/view_video.php?viewkey=49fab9c2843e9b54e2a1

Monday, 7 July 2008

பூனையோ..பூனை..அட்டகாச பூனைகள்..

Tuesday, 1 July 2008

உலக மகா ஓட்டைகள்..எட்டு.. :))

அறிவு பூர்வமான பதிவு... கடைசியிலே கும்மாங்குத்து இருக்கு..


கிம்பர்லி - பிக் ஹோல்..என்று பெயர்.. தென் ஆப்ரிக்கா வில் உள்ளது.. மனிதனால் தோண்டப்பட்ட துளைகளில், இதுவே ஆழமானது..1097 மீ ஆழாம்.. 3டன் வைரங்களை இதுவரையில் நமக்கு கொடுத்துள்ளது.. 1914 ல் மேலும்தோண்டுதல் கைவிடப்பட்டது..

***********************************************************************************

குளோரி ஹோல்.. அமெரிக்கா வில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளமோண்டி செல்லோ அணையில் உள்ளது.. (நம்ம ஊர்ல மேட்டூர் அணையில் இந்தமாதிரி சின்ன அளவில் ஒன்று உள்ளது) இது நொடிக்கு 14,400 கன அடி நீரைவிழுங்கும் கொள்ளளவு உள்ளது..

***********************************************************************************

பிங்காம் சுரங்கம்.. அமெரிக்கா வில் உட்டா மாகாணத்தில் உள்ளது.. 1863 ல்நோண்ட ஆரம்பித்தவர்கள் இன்னமும் நோண்டி எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள் .. (கனிமத்தை) கிட்டத்தட்ட 1 கி.மீ ஆழமும் , 3 கி.மீ விட்டமும்கொண்டது..

***********************************************************************************

பெரும் நீல துளை.. (கிரேட் ப்ளூ ஹோல்)..இருப்பது பெளிஜ் என்ற மத்தியஅமெரிக்கா நாட்டில்.. இது மாதிரி பல உலகெங்கிலும் இருந்தாலும்.. இயற்கையாக கடலில் உருவான மிக பெரிய துளை இதுவே..

***********************************************************************************
இதைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்..செர்பியா நாட்டில் உள்ள திறந்தவைர சுரங்கமான மிர்னி என்பதே இது.. 525 மீ ஆழமும், 1200 மீ மேல்விட்டமும் உடையது... இந்த ஓட்டைக்கு மேல் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாம்..(சில முறை ஹெலிகாப்டர் களை உள்ளுக்கு இழுத்துவிட்டதால்..)

***********************************************************************************
டியவிக் சுரங்கம்..கனடா நாட்டில் உள்ளது.. இந்த துளைக்குள்ளே..ஒரு போயிங்737 விமான ஓடு தளமே உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. சுற்றி உள்ளநீர் பணியாக உறைந்து இருக்கும் பொது.. கண்கொள்ளா காட்சியாம்..

***********************************************************************************
சிங்க் ஹோல்.. இது இந்த வருட ஆரம்பத்தில் குட்டா மாலா (Guatemala) நாட்டில் ஏற்பட்ட நில உள்ளிழுப்பு.. இது பல சொத்து சேதங்களையும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது.. :(((

***********************************************************************************

கடைசீயா இந்த ஓட்டை தான் மேலே இருப்பவைகளை விட மிக மிக பெரியது..

இதை ஆங்கிலத்தில் அழாகாக ஆஸ் ஹோல் என்பார்கள்.
. இது ஏற்படுத்திய சேதம் அளவிட முடியாதது..இன்னமும் இது ஓயவில்லை.. கீழே போய் பாருங்களேன்.. என்ன என்று..

.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.



இவர் வாயை மூட இது வரை ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை..

Friday, 27 June 2008

மனைவியை நேசிக்கிறீங்களா ??

நீங்க உங்க மனைவியை ரொம்பவே நேசிக்கிறீங்கன்னா இவ்வளவு அன்பாஇருப்பீங்களா ? இவரை பாருங்க..படு சூப்பர் மனைவியை விரும்புராரு போலஇருக்கு..


Thursday, 26 June 2008

பில்டிங் காண்ட்ராக்டு ...இப்படித்தான் முடியுமா ??

வடிவேலு "வெற்றி கொடி கட்டு " படத்துல சொல்லுவார் !! ஊருக்குள்ளே நான்பதவிசா "பில்டிங் கான்றாக்க்டு" ன்னு சொல்லிவெச்சிருக்கேன்..கெடுத்துடாதே..ன்னு.. அப்படி கட்டுனாதா இந்த பில்டிங் ங்குக..









கீழே பாருங்க.. ATM இப்படி கட்டுனா..காசு எப்படி எடுக்குறதாம் ??


Monday, 23 June 2008

ஜகர்தா வா இல்ல ஜாலி கர்தாவா ? பாகம் - 2

இரண்டாம் பாகத்துக்கு வருகிறேன்.. இதில் முதல் பாயிண்ட் ஆனா "டாலர் சம்பளம்" பற்றி சற்றே விபரமாக பேசுவோமே..

விஷயத்துக்கு போவதற்கு முன் சில நாணய மதிப்புகளை பார்ப்போம்.. (ஒரு குத்து மதிப்பாக தான்)

1 USD = 10,000 இந்தோனேசியா ரூபியா (கிட்ட தட்ட )
1 INR = 225 இந்தோனேசியா ரூபியா (கிட்ட தட்ட)

சரியான நாணய மதிப்பிற்கு இங்கே கிளிக்கி பின்னர் சென்று பாருங்கள்..
இந்தோனேசியாவில் வங்கிகள் செயல் பாடு பற்றி சிறு குறிப்பு:

ஓகே.. முதலில் உங்களுக்கு சம்பளம் அமெரிக்க டாலர் களில் தான் பேசப்படும்.. ஏனைய தூரக்கிழக்கு நாடுகளாகிய சிங்கப்பூர், மலேசியா போன்றவற்றில்அந்ததந்த நாட்டு கரன்சி களில் சம்பளம் வழங்கப்படுவது போல இந்தோனேசியாவில் கிடையாது.. வங்கிகளில் கூட நீங்கள் இரண்டு விதமானகணக்குகளை திறந்து கொள்ளலாம்..ஒன்று உள்ளூர் ரூபியாவில் , மற்றொன்றுUSD (அதாவது அமெரிக்க டாலர் ல்) ..ரூபியாவில் கணக்கு திறந்தால் கையில்கத்தை கத்தை யாக எடுத்துக்கொண்டு திரிய வேண்டி இருக்கும்.. ATM வசதிகள்மற்றும், வங்கி வசதிகள் இந்தோனேசியாவில் இந்தியா வை விட ஒரு படி மேல்.. எல்லா வங்கிகளும் computerised, இன்டர்நெட்-பாங்கிங், வெளிநாட்டு Money-Transfer எல்லாம் சிறப்பாகவே இருக்கின்றன..மேலும், வங்கிகள் திங்கள் முதல்வெள்ளி வரை மட்டுமே.. சனி, ஞாயிறு லீவு..

இப்போ சம்பள விஷயத்துக்கு வருவோம்..

உங்களை வேலைக்கு எடுக்கும் கம்பெனி..உங்களுக்கு இரண்டு வேலை அனுமதி கடிதம் (Appointment Letter) கொடுப்பார்கள்.. இதில் உங்கள் சம்பளம் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் .. அதாவது.. 60:40 அல்லது 50:50 என்ற விகிதத்தில் .. (விகிதத்தை நீங்கள் கூட அவர்களுக்கு பரிந்துரைக்கலாம்) இதற்குள் ஒரு சின்ன உள் குத்தும் உண்டு.. (நமக்கு இல்லை)

உங்களின் வெளிநாட்டு வங்கி கணக்கு எண்ணை (NRI அக்கௌன்ட் எண்) அவர்கள் கேட்டு பெற்றுக்கொள்வார்கள்..(தைர்யமாக கொடுக்கலாம்) அதில் பிரதி மாதம் சம்பள தேதியன்று.. நீங்கள் பரிந்துரைத்த விகிதத்தின் படி உங்கள் சம்பளம் உங்களின் NRI வெளிநாட்டு கணக்கில் சென்று விடும்..(வங்கி கமிஷன் கூட அவர்களே கட்டி விடுவார்கள்) இந்த அமௌன்ட் உங்களின் முதல் வேலை அனுமதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.. இது உங்களுக்கும் கம்பெனி க்கு மட்டுமே உள்ள ரகசியம்..

இரண்டாவதாக, மீதமுள்ள அமௌன்ட் உங்கள் உள்ளூர் கணக்கில் (இந்தோனேசிய வங்கியில்) டாலர் ஆக டெபொசிட் செய்யப்படும்.. அதை நீங்கள்.. டாலர் ஆகவோ அல்லது இந்தோனேசியா ரூபியாவாகவோ எடுத்துக்கொள்ளலாம்..

இதில் உள்குத்து என்னவென்றால், இரண்டாவதாக உங்களுக்கு அளிக்கப்படும் வேலை அனுமதி கடிதம் தான் இந்தோனேசியா அரசாங்கத்திற்கு அளிக்கப்படுவது.. (அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை தான்.. இந்தோனேசியா அதற்க்கு பேர் போனது தானே !! :)) ) அந்த கடிதத்தில் மீதமுள்ள சம்பளம் உங்கள் சம்பளமாக குறிப்பிடப்பட்டிருக்கும்..அதாவது உங்களுக்கு பேசிய சம்பளத்தில் கிட்டதட்ட பாதியை தான் அவர்கள் அரசாங்க வருமான வரிக்கு கண்க்க்கிட்டுக்கொள்வார்கள்.. மீதம் காந்தி கணக்கு..(அவர்களை பொறுத்த மட்டில் ).. ஆனால் நமக்கு சேர வேண்டியது சரியாக போய் விடும்.. (So, no worries !!)

இந்தோனேசியாவில் எண்ணெய் நிறுவனங்கள், கனிம நிறுவனங்கள், வங்கி சேவைகள் இவற்றிற்கு இந்தியர்கள் தேவைப்படுவதால்.. அங்கே இந்தியர்கள் அதிகம் வேலை பார்க்கிறார்கள்..

எனவே.. இந்தோனேசியாவில் வேலை என்றால் தயங்க வேண்டாம் .. சூப்பர் offer என்றால் ஒத்துக்கொள்ளுங்கள்..

உங்கள் கருத்துக்கள், கேள்விகளை பினூட்டமாக இடுங்கள்.. பதில் தருகிறேன்..

---அடுத்த வாரம்..பார்ப்போமே..

ஆபீஸ் டெலிபோன் ல மொக்கை போடுற பெண்களுக்கு..

இந்த வீடியோ வை எங்க வீட்டுக்காரம்மா கிட்ட காட்டினேன்.. அன்னிலேர்ந்து.. போன் மொக்கை போடுரதையே விட்டுட்டாங்க....

ஆபீஸ்
எல்லாரும் ஒரேமாதிரி இருக்க மாட்டாங்களே ??

Friday, 20 June 2008

ஜகர்தா வா இல்லை ஜாலி கர்தாவா ?? பாகம் - 1

ரொம்ப நாளா எனக்கு ஒரு கேள்வி.. இந்தோனேசியா தலை நகரான ஜகர்தா வுக்குவேலைக்கு போன என் நண்பர்கள் அங்கேயே செட்டில் ஆகி விட்டனர்.. அப்படிஎன்ன மர்மம் இருக்குன்னு தெரியல.. நானும் சென்ற வருடம் அங்கே வேலைபார்த்த போது தான் புரிந்தது..
  • டாலர் சம்பளம்..
  • வருமான வரியை கம்பெனி யே கட்டிடும்..
  • வீடு குடுத்துடுவாங்க..
  • விலை வாசி ஒன்னும் அதிகம் இல்லை. அருகில் உள்ள சிங்கப்பூர், மலேசியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது..
  • வீட்டு வேலைக்கும், மேற்படி வேலைக்கும் ஆள் வைத்துக்கொள்ளலாம்..
  • contract போட்டு கலியாணமும் பண்ணிக்கலாம்.. (புள்ளை மட்டும் பெத்துக்காதபாத்துக்கணுமாம்., புள்ளை பெத்துட்டா, நாம தான் தூக்கினு போகணுமாம்.. இதெல்லாம் அந்த அரசாங்கத்தோட சட்டமாம்)
  • பெட்ரோல் விலை அங்கே ரொம்ப கம்மி..30 ரூபாய் க்குள் தான்..
  • கார் வைத்துக்கொள்வது..சர்வ சாதாரணம்.. (ஆனா டிரைவர் கண்டிப்பா வேணும்.. டிராபிக் ஜாம் ரொம்ப பிரசித்தம் அங்கே.. தாய்லாந்து தலைநகர் பாங்காக் விட மோசம்..)
  • சுத்தி பாக்க நெறையா இடம் இருக்கு அங்கன..
  • துபாய், சவூதி யை விட எவ்வளவோ தேவலாம்..தட்ப வெட்ப நிலையை சொல்லுறேன்..


இன்னமும் சுவாரசியமான தகவல்கள் இருக்கு.. வரேன் மெதுவா..

கேமரா வை சரியான நேரத்தில கிளிக்கி..

உங்க கேமரா வோட கிளிக் பொத்தான சரியான சமயத்துல அமுக்கினீ ங்கன்னா இந்தமாதிரி படங்கள் உங்களுக்கு கண்டிப்பா மாட்டும்.. கீழே நம்ம கமெண்ட் ம சேத்திருக்கேன்.. :)

===================================================================


..இது தான் நாய் வாயிலே நாயா ??
--------------------------------------------------------------------------


என்னையும் உங்களோட சேர்த்துக்குங்களேன் ??
-----------------------------------------------------------------------------------------------------------------

இதென்ன பூ வாசமா ? இல்லை பூனை வாசமா ??

எனக்கே நோ என்ட்ரி யா ??
---------------------------------------------------------------------------------------------------------

நக்கினாலேயே செத்துடுவ போலிருக்கே ??
------------------------------------------------------------------------

F-16 ஆ கொக்கா .. சோடி போட்டு பாத்துருவோமா ? சோடி !!
--------------------------------------------------------------------------

தூக்கம் என் கண்களை தழுவட்டுமே !!

----------------------------------------------------------------------------
எங்க சித்தப்பூ சிங்காரம் இப்படி தான் தூங்குவாரம்..
--------------------------------------------------------------------------
படத்துலேயே இருக்கு கமெண்ட்..பாத்துகுங்க..
---------------------------------------------------------------------
கடைசீயா ஒரு பழைய கிளாசிக் ஷாட் !! பூனைங்க எவ்வளவு ஸ்மார்ட் பாருங்க..

அனுப்பிய நண்பர் இந்தோனேசியா பாரிவேலனுக்கு நன்றி..

Thursday, 19 June 2008

பெண்கள் சிகை அலங்காரத்துக்கு ஒரு டிப்ஸ்..






பெட்ரோல் விலை இந்தியா வில் குறைவே !!

ஆமாங்க.. இந்தியாவில பெட்ரோல் விலை குறைவு தாங்க.. நாம அன்றாடம்பயன் படுத்துற இதர பொருட்கள் விலையோட ஒப்பிட்டு பாருங்க.. தெரியும்.. ஒருசின்ன ஒப்பிடல் கீழே !


  • கோகோ கோலா 330 மில்லி கேன் = 20 ரூ (லிட்டர் 61 ரூ ??)
  • டெட்டோல் 100 மில்லி பாட்டில் = 20 ரூ (லிட்டர் 200 ரூ ??)
  • பான்டீன் ஷாம்பூ 400 மில்லி பாட்டில் = 165 ரூ (லிட்டர் 413 ரூ ??)
  • வாய் கழுவி (Listerene) 100 மில்லி = 45 ரூ (லிட்டர் 450 ரூ ??)
  • காபி 100 மில்லி (ஒரு நல்ல ஹோட்டல் ல்ல ) = 20 ரூ (லிட்டர் 200 ரூ ??)
  • after shave lotion (ஓல்ட் ஸ்பைஸ் ) 100 மில்லி பாட்டில் = 175 ரூ (லிட்டர் 1750ரூ ??)

இப்ப வாங்க அப்பு .. இது தான் சூப்பர் ஆப்பு..

கம்ப்யூட்டர் கலர் பிரிண்டர் இங்க் இருக்கு இல்ல (HP Deskjet)
அது க்கு உபயோக படுற 21 மில்லி இங்க் cartridge = 1900 ரூ (லிட்டர் 90476 ரூ ??)

இத விட சூப்பர் பகல் கொள்ளை யை நீங்க பாத்து இருக்கீங்களா ??

இப்போ பெட்ரோல் விலைய பாருங்க..
பெட்ரோல் லிட்டர் ரூ 52
டீசல் லிட்டர் ரூ 37..

பெட்ரோல் விலை கம்மின்னு ஒத்துக்கறீங்களா ??

Wednesday, 18 June 2008

ஞானியின் உருப்படாத யோசனைகளை...!!

கீழே காணும் ஆலோசனைகள் பெட்ரோல் விலை அதிகரிப்பு குறித்து (எல்லாமே இலவசம் தான் !!) திரு.ஞானி அவர்கள்18.06.2008 குமுதம் இதழில் - பக்கங்களில் எழுதியவை.. எனது கமெண்ட் சிகப்புநிறத்தில் அடைப்பு குறிக்குள்...

"சிக்கனத்துக்கு என் யோசனைகள் இதோ. இதை விட இன்னும் சிறப்பான யோசனைகளை எல்லாரும் யோசிக்கலாம்."

1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

(கேக்க நல்லா தான் இருக்கு .. ஆடோவில பிளாஸ்டிக் கேன் எடுத்துனு வந்து பெட்ரோல் வாங்கிட்டு போயி கார்ல போடுவான் நம்ம ஆளு..உலகத்துல எல்லா தகிடு தத்தமும் நம்ம ஆட்களுக்கு அத்துப்படி..அதனால இவரோட இந்த யோசனை சாத்தியமில்லை..)

2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.

(இது தேவலாம்.. ஆனா அரசியல் வாதிங்க பிள்ளைகள், பணக்கார பிள்ளைகள் எல்லாம் இதுல சேத்தியா ??)

3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.

(சுய நிதி கல்லூரி முதலாளிகள் (அதாங்க..நம்ம அரசியல் வாதிங்க தான்) முதல்ல இதுக்கு சர்வதேச கோர்ட் வரை போயி ஸ்டே வாங்கிடுவாங்க.. பிசினஸ்பாதிக்குமில்ல ??)

4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

(சான்ஸ் இல்ல.. இவுங்க பதவிக்கி வர்றதே இந்த சுகத்துக்காகத்தான்...)

5. எந்த நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

(அப்புறம் கட்சிக்காரங்க என்னிக்கித்தான் ஆட்சியோட பலான அனுபவிக்கிறதாம் ? அதாங்க ! contract..துட்டு சமாசாரம்..இதுல தான காஸ் பாக்குறாங்க ??)

6. முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்களுக்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.

(வேற விஷயம் ஏதாவது உருப்படியா சொல்லிங்க ஞானி சார் !!)

7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

(இந்த விதி இந்தோனேசியா தலை நகர் ஜகர்தா வில் ஏற்கனவே உண்டு.. காரில் 3 பேருக்கு கீ ழே பயணிக்க கூடாது என்று.. அப்படி பயணித்தால் அபராதமும் உண்டு.. இத்தனை உள்ளூர் மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு சாலை ஓரங்களில் கட்டை விரலை காட்டியவாறு நிற்பார்கள் [முக்கியமாக விடலை பசங்கள்].. எந்த கார் 3 பேருக்கு குறைவாக செல்கிறதோ அதில் ஏறிக்கொள்வது, கார் சொந்தக்காரர் 5 பத்தோ கொடுப்பார், சவாரிக்கு சவாரி இலவசம், காசும் கூட, கார் சொந்தக்காரருக்கு 3 பேர் கணக்கும் ஆகிவிடும்..ஒரு புதிய சமூக தொல்லைக்கு அடித்தளம் போடுறமாதிரி இருக்கு...)

இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

தமிழ் வலைப்பூக்களில் நான் கண்ட வித்தியாசமான பக்கம் இது..

http://thenkinnam.blogspot.com/

முற்றிலும் தமிழ் திரை இசைக்கெனவே ஒதுக்கப்பட்டது.. இந்தவாரம் இவர் பாடகர் ஜெயச்சந்திரன் அவர்களை தேர்ந்து எடுத்திருக்கிறார்..

என் இசை அனுபவத்தில் (8 ஆண்டுகள் தமிழ் திரை / பாலிவூட் திரை உலகங்களில் பணியாற்றி இருக்கிறேன்)..ஜெயச்சந்திரன் அவர்கள் ஒரு lighter version of கே.ஜே.ஜேசுதாஸ் என்று சொல்லலாம்.. அப்படி ஒரு இனிமையான குரல்..பணிவான தன்மை..மலையாள திரை இசையில் ஜெயச்சந்திரன் அவர்கள் சாதித்தது ஏராளம்.. இளைய ராஜ இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்..

சிலசமயம் பாடுவது இவரா அல்லது கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களா என்ற குழப்பமும் இருக்கும்.. பொதுவாகவே மலையாளி ஆண் பாடகர்கள் அனைவரிடமும் ஜேசுதாஸ் அவர்களின் சாயல் இயற்கையாகவே காணப்படும்.. (ஏன் ??)

மேற்குறிப்பிட்ட வலை பக்கத்திற்கு சென்று..பாருங்களேன் ஒருமுறை..!!

அன்புடன்,

கீ-வென்..

Tuesday, 17 June 2008

ஜூன் 2008 செய்திகள் வாசிப்பது...புண்ணாக்கு கோவிந்தன் ...



  • ஷில்பா ஷெட்டி யை நாய் கடித்து விட்டதாம் .. ஏன் என்று கெட்ட போது.."நாய்க்கு ஹார்மோன் கோளாறு" என்று அவர் கூறியதாக தகவல்..
(நாய்க்கு ஹார்மோன் கோளாறா அல்லது ஷில்பாவுக்கு ஹார்மோன் கோளாறா ? பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு பின்னரே இவரது நடவடிக்கைகள் வித்தியாசமாகவே உள்ளதே ? எதாவது நியூஸ் குடுத்துக்கிட்டே இருக்காரு..?)

  • திருப்பதியில் நடிகை ரோஜா மது பான கடைகளை அடித்து நொறுக்கினார்..
(ம்ம்ம் ... முன்ன பண்ண பாவத்துக்கு இப்போ பரிகாரம் தேடுராராக்கும்)

  • தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் ராம.நாராயணனை எதிர்த்து நடிகை ராதிகா போட்டியிடவுள்ளார்..
(வூட்டுக்காரர் அரசியல்வாதி, வூட்டுக்காரம்மா சினிமா வழி உள்குத்து அரசியலா?)

  • மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
(எம்.ஜி.ஆர் உயிரோட இல்லை ங்கற தைரியத்துல தான் ஆல்லாளுக்கு நான் கருப்பு எம்.ஜி.ஆர், நான் பச்சை எம்.ஜி.ஆர் ன்னு சொல்லிக்கிட்டு திரியுறாங்க.. கேப்டன்.. யு டூ ப்ருட்ட்டஸ் ? தில் இருந்தா உங்க "நரசிம்மா" படத்த நீங்களே ஒருமுறை பாருங்க..)

  • தசாவதாரம் ஒருவழியாக ரிலீஸ் ஆனது..தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நெஞ்சை பிடித்துக்கொண்டு அலைவதாக தகவல்..
(10 வேஷம் போடுறேன்னு ஆஸ்கார் ரவியை 11 வது வேஷம் போட வைத்து விட்டார் போலும் கமல்.. அதென்ன OSCAR லேந்து AASKAR ? எங்க ஊருல ரேஷன் கடையில சக்கரை அளக்குர்றவான் பேரு அஸ்கா ரவி :)))

இப்போதைக்கு அவ்வளவு தான்..அடுத்த மாசம் பாப்போம்..

பின் குறிப்பு : இது எல்லாம் எங்க காட்டூர் கருப்பண்ண சாமிக்கு எழுதி கிட்டதாக்கும்..

சீரியல் பாக்குற பொம்பளைங்களுக்கு..



என்னத்த
சொல்ல.. நான் ரொம்பவே ரசிச்சது..


இவரோட அனுபவத்தையும் பாருங்க..

Thursday, 12 June 2008

கலைஞர் டி.வி.. இப்படி தான் இருக்காம்..


படமே போதும்..
அதுல பாருங்க.. ஆற்காடு வீராசாமி என்ன குத்து குத்துராருன்னு.. :))

நன்றி: கார்டூனிஸ்ட் மதி


இந்தியர்களுக்கு ஒரு அவசியமான தகவல்..

அமீரகத்திலுள்ள என் நண்பர் அனுப்பியது..அனைவருக்கும் உபயோகப்படலாம்..குறிப்பாக இந்தியா வில் வசிப்பவர்கள், இந்தியா வுக்கு பிரயாணம் செய்பவர்களுக்கு... எல்லாமே கட்டணமில்லா தொலைபேசி எண்கள்..

விமான நிறுவனங்கள்
Indian Airlines - 1800 180 1407
Jet Airways - 1800 22 5522
SpiceJet - 1800 180 3333
Air India -- 1800 22 7722
KingFisher - 1800 180 0101

இந்தியாவில் உள்ள வங்கிகள்
ABN AMRO - 1800 11 2224
Canara Bank - 1800 44 6000
Citibank - 1800 44 2265
Corporatin Bank - 1800 443 555
Development Credit Bank - 1800 22 5769
HDFC Bank - 1800 227 227
ICICI Bank - 1800 333 499
ICICI Bank NRI - 1800 22 4848
IDBI Bank - 1800 11 6999
Indian Bank - 1800 425 1400
ING Vysya - 1800 44 9900
Kotak Mahindra Bank - 1800 22 6022
Lord Krishna Bank - 1800 11 2300
Punjab National Bank - 1800 122 222
State Bank of India - 1800 44 1955
Syndicate Bank - 1800 44 6655

Indian Railway General Enquiry 131
Indian Railway Central Enquiry 131
Indian Railway Reservation 131
Indian Railway Railway Reservation Enquiry 1345,1335,1330
Indian Railway Centralised Railway Enquiry 1330/1/2/3/4/ 5/6/7/8/9

Couriers/Packers & Movers

ABT Courier - 1800 44 8585
AFL Wizz - 1800 22 9696
Agarwal Packers & Movers - 1800 11 4321
Associated Packers P Ltd - 1800 21 4560
DHL - 1800 111 345
FedEx - 1800 22 6161
Goel Packers & Movers - 1800 11 3456
UPS - 1800 22 7171

Home Appliances
Aiwa/Sony - 1800 11 1188
Anchor Switches - 1800 22 7979
Blue Star - 1800 22 2200
Bose Audio - 1800 11 2673
Bru Coffee Vending Machines - 1800 44 7171
Daikin Air Conditioners - 1800 444 222
DishTV - 1800 12 3474
Faber Chimneys - 1800 21 4595
Godrej - 1800 22 5511
Grundfos Pumps - 1800 33 4555
LG - 1901 180 9999
Philips - 1800 22 4422
Samsung - 1800 113 444
Sanyo - 1800 11 0101
Voltas - 1800 33 4546
WorldSpace Satellite Radio - 1800 44 5432

Cell Phones
BenQ - 1800 22 08 08
Bird CellPhones - 1800 11 7700
Motorola MotoAssist - 1800 11 1211
Nokia - 3030 3838
Sony Ericsson - 3901 1111

இங்கன இலவசமா கண் பரிசோதனை செஞ்சிக்குங்க..

கீழ்க்கண்ட முறைகளை முயற்ச்சி செய்யவும்.. தங்கள் கண் பார்வை எந்த அளவில் உள்ளது என்று அறிந்து கொள்வீர்கள்...


  • முதலில் இடது கண்ணை மூடவும்..

  • பிறகு..கீழே உள்ள சிகப்பு நட்சத்திர குறியை நோக்கி உங்கள் சுட்டி (Mouse cursor)ஐ நகர்த்தவும்..

*



  • நட்சத்திர குறி மேல் வலது - கிளிக் செய்யவும் (Right Click)

  • பிறகு தென்படும் பாக்ஸ் ல் சென்று "செலக்ட் ஆல்" செய்யவும்...

  • உங்க கண் பார்வை எவ்வளவு சூப்பர் ஆ இருக்குங்குற ரிசல்ட் ஐ கீழே பாருங்க... :)

யோவ் ! மங்குனி ! யாராவது எதாவது சொன்ன ஒடனே செஞ்சிடறதா.. சுய புத்தி வேணாம்...?? போயி வேலைய பாருய்யா..அத்த உட்டுட்டு இங்கே வந்து..மொக்கை போடுற..


அம்புடுதேன் !!!


இன்னொரு கார் ஆட்டம்..

மொதல்ல போட்டது.. ரியல் .. இது கொஞ்சம் கிராபிக்ஸ் சேர்த்து... மொக்கையா !!

கார் டான்ஸ்..பாருங்க..!!

பார்த்ததிலே .. இது ரொம்பவே புதுசு....எனவே...
நோ கமெண்ட்ஸ்... ஒன்லி படம் மட்டும்.. கமெண்ட்ஸ் ஐ நீங்க போடுங்க.. கூடவே கொஞ்சம் சவுண்டு வெச்சி கேளுங்க..



Monday, 9 June 2008

தற்போதைய தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்கள் திருடர்களா ??

தற்போதைய தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்கள் திருடர்களா ??

இது என் மனதில் ரொம்ப நாட்களாகவே இருக்கின்ற ஒரு கேள்வி... நானும் ஒரு இசைக் கலைஞன் தான்.. மொழி வேறுபாடு இன்றி எந்த நாட்டு இசையையும் கேட்பது என் வழக்கம்... அப்படி கேட்பதால் யார் எங்கே திருடுகிறார்கள் என்பது தெள்ள தெளிவாகவே தெரிகிறது... இது சம்பந்தமாக சில இசை அமைப்பாளர்களிடம் நான் நேரடியாகவே கேட்டேன்.. வந்த பதில் சற்று அதிர்ச்சியாகவே இருந்தாலும்..அவர்கள் கூற்றில் கொஞ்சம் (10%) நேர்மை இருந்ததாகவே பட்டது..

ஆயினும், நான் ஒரு வலைத்தளத்தை பல நாட்களாக படித்து வருகிறேன்.. அது..
www.itwofs.com
இதன் உரிமையாளர் கார்த்திக்.. இவர் கோவையை சேர்ந்தவர் என்பது அவருடன் எ-மெயில் மூலம் தொடர்பு கொண்டபோது புலப்பட்டது.. இவர் இதை ஒரு பொழுது போக்காக தொடங்கியதாக கூறுகிறார்..தற்போது மிகவும் சீரியஸ் ஆக ஆகி விட்டது..போலும்.. இவர் அதிகமாக தோலுரித்து காட்டியது தற்போதைய ஹிந்தி இசை அமைப்பாளர்களே.. இவர் கண்டு பிடிப்புகளுக்கு இசைஞானி யும், எம்.எஸ்.வி யும், A. R. ரகுமானும் கூட தப்பவில்லை...

இவரை ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் அடையாளம் கண்டு கொண்டு, கரன் தாப்பார் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் இரண்டு ஹிந்தி முன்னணி இசை அமைப்பாளர்களுடன் இவரை நேர்கான வைத்தது..சிறப்பம்சம்.. இவர் நேரடியாகவே அந்த இசை அமைப்பாளர்களை (பிரீத்தம், அன்னு மாலிக்..) குறிப்பிட்டு கேட்க..ஒருவர் மழுப்ப, இன்னொருவர் சப்பை கட்டு கட்ட.. ரொம்ப சுவாரசியமாகவே இருந்தது.. கீழே அதன் You Tube தொடர்பை கொடுத்துள்ளேன்..

http://youtube.com/watch?v=z_cpKFQ0hjE
http://youtube.com/watch?v=zrq9zB43DWo
http://youtube.com/watch?v=CfH8GPHcchM

இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் ஏன் நடத்துவதில்லை என்று புரியவில்லை... (பொழைப்பு போய் விடுமோன்னு பயமோ ??) ஆயினும், நான் சந்தித்த சில தமிழ் இசை அமைப்பாளர்கள் கூறியது..

" சார் ! Producer , director என்ன கேட்குராரோ அதை தான் நாங்க செய்யுறோம்.. எங்களோட கற்பனையை சரியா புரிஞ்சி கிட்ட இயக்குனர்கள் சில பேரே !! மத்தவங்கள் எல்லாம் ஞான சூனியங்கள்..தான் .. எங்களுக்கும் பொழைப்பு ன்னு ஒண்ணு இருக்கிலே..அதையும் பாக்கணும்.."

இதை சொன்னவர் ஒரு தற்போதைய முன்னணி தமிழ் இசை அமைப்பாளரே.. ஆச்சர்யமாக இருந்தது எனக்கு... இசை ஞானி யும், எம்.எஸ்.வி யும் உயிரை கொடுத்து இசை அமைத்த காலம் போய் மனதில் நிற்காத பாடல்களை கேட்கும் நிலை வந்து விட்டதே என்று...

உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. மீண்டும் தொடர்வோம்...


Thursday, 5 June 2008

லபோ..லபோ.. லப்பினக்கா..(முடிவு பகுதி)

போலீஸ் ரெய்டு வந்த பின்பு..செய்வதறியாது தவித்த 5 Men Army., திசைக்கொருவராய் பாய்ந்தது... முதலில் மாட்டியவர்..டீ யில் கயிற்றை நனைத்து தாலிக்கயிறு ரெடி பண்ணிக்கொண்டிருந்தவர்...இவருக்கு A.C விட்ட அறையில்..ஒரு பல் விழுந்து விட்டது.. கூடவே திட்டும் வேறு..

" எந்துக்குரா இக்கட ஓச்சாவா... மஜா சேசெதுக்கு வேறே ஜாகா லேதா ??"

பின்னர் மாட்டியவர்..இருவர்... அதே கவனிப்பு...

நான்காமவர் மொட்டைமாடியில் சென்று ஒளிந்து கொள்ள... அங்கே சென்ற கான்ஸ்டபிள் அவரை கண்டு மிரட்ட... கான்ஸ்டபிள் க்கு 100 ரூ கொடுத்து எஸ்கேப் ஆகி விட்டார்..நம் ஆள்...

ஐந்தாமவர் தான் இந்த நிகழ்வின் ஹை லைட் .. முன் கூறிய படி.. "சரக்குக்கு" சாப்பாடு எடுத்து சென்ற நண்பர்..ரெய்டின் போது.. இவரும், சரக்கும்.. உணவருந்திக்கொண்டு இருந்ததால்..நிஜ கணவன், மனைவி என்று நினைத்து போலீசார் விட்டு விட்டு சென்று விட்டார்கள்.. கூடவே., அட்வைஸ் வேறு..

"பாத்தா நல்ல பாமிலி மேன் மாதிரி..இருக்கீங்களே.... தங்க வேற Lodge கிடைக்கலையா ?"

ன்னு compliments வேற.....கமிஷனர் இந்த மாதிரி சொன்ன உடனே..நம் நண்பர் புளகாங்கிதம் அடைந்து விட்டார்...

ஒரு வழியா நடு ராத்திரி 1 மணிக்கு..இந்த கூத்து..முடிவுக்கு வர.. எஸ்கேப் ஆனா நண்பரோட அண்ணன் "Guide" திரும்ப வர.. சண்டை ஆரம்பித்தது...வந்ததுக்கு எல்லாம் வேஸ்ட்..ன்னு... திடீர்னு..கணக்கு பாத்தபோது..2 பேர் மிஸ்ஸிங்.. ஒருத்தர் மொட்டை மாடியிலேயே ஐக்கியம் ஆகிவிட.. சாப்பிட்டு விட்டு நண்பரும், சரக்கும் தங்கள் தொழிலில் பிசி ஆகிவிட.. மாட்டி அடி வாங்கி நொந்து பொய் உக்கார்ந்து இருந்த மூவருக்கும், Guide ஐடியா கொடுக்க "போயி அந்த ரெண்டு பேரோட நீங்களும் ஐக்கியமாயிடுங்கடா" ன்னு...
கடைசியில்..கையிலிருந்த காசெல்லாம் கரைத்து விட்டு.. ஞாயிறு இரவு..சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்..

நானும், மாற்ற நண்பர்களும், இவர்களை வீட்டு வாசலிலேயே நிறுத்தி குளிக்காமல் எந்த நாதாரி நாயும் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சத்தம் போட்டு விட்டு.. நண்பரின் அண்ணனை தேடினோம்...அவர், already எஸ்கேப்..ஆகிவிட.. பின்னர் ஒருநாள் அவருக்கு பூசை வைத்துக்கொள்ளலாம் என்று..விட்டு விட்டோம்.
ஆக மொத்தம்.. இந்த ௫ Men Army யின் members அத்தனை பேரும் இன்று அரசு பணியில் இருப்பது தான் சிறப்பு அம்சம்.. (அதான் யார் பேரையும் நான் போடலை..)

இந்த பதிவுகளோட நீதி என்னன்னா.. ஆசை பட்டு கூட ஆந்திரா பக்கம் போயிடாதீங்க... பாஷை தெரியாம , சமாளிக்க முடியாம மாட்டிகிட்டீங்கன்னா.. சங்கு தான்..!!!

பின் குறிப்பு : இன்னமும் சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்ததாக ஒரு மெம்பெர் கூறினார்.. கொஞ்சம் ஓவர் கிளு கிளுப்பா இருந்ததனால்..எழுதலை...

Wednesday, 4 June 2008

லபோ .. லபோ.. லப்பினக்கா.. (தொடர்ச்சி..)

நீங்க இதை படிக்கிறதுக்கு முன்னால ஒரு டிஸ்கி.. இது ஜஸ்ட் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது (உண்மை சம்பவம் தான்!!) எந்த ஒரு தனி மனிதரின் மனதை புண்படுத்தும் நோக்கம் இதில் கிடையாது..

1990 வருடம்.. எனக்கு திருமணம் ஆவதற்கு முன்.. சென்னை அண்ணா நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தோம்.. (5 பேர் நிரந்தர மாகவும், லோக்கல் நண்பர்கள் வந்து போவதுண்டு). இதில் திருமணம் ஆகும்வரை பெண் வாடையே வேண்டாம் என்று வாழ்ந்தவர்கள் நாங்கள் 4 பேர்.. (நம்புங்கய்யா !! அப்படி சந்தேகமா பாக்காதீங்க..) மீதமுள்ள 5 பேர் அது தான் உலகம் என்று முறுக்கிக்கொண்டு தென்னிந்தியா முழுக்க அலைந்தவர்கள்...

அப்போது என் நண்பர் ஒருவரின் அண்ணன் சென்னையில் Travels கம்பெனி வைத்து இருந்தார்.. அவருடன் இந்த 5 பேர் கோஷ்டி..ஆந்திராவை நோக்கி புறப்பட்டது.. இந்த பிரயாண த்திற்காக பிரத்தியேக மந்திராலோசனை செய்தார்கள்.. முடிவாக பெத்தாபுரம் வெகு தூரம் என்பதால், அருகில் உள்ள சிலக்கலூரி பேட்டை க்கு செல்வது என்று தீர்மானித்தார்கள்..
பிறகு ஒரு சனிக்கிழைமை காலை பூஜை போட்டு..5 men Army (இப்படி சொல்வோமே !!) கிளம்பியது..நண்பரின் அண்ணன் முன் கூட்டியே சொல்லி விட்டார்.. அவர் ஒன்லி Guide மட்டும்.. மேற்படி எதுவும் செய்ய மாட்டார் என்று... செலவு மிச்சம் என்று 5 men Army சந்தோஷப்பட்டது...

ஒரு வழியாக சிலக்கலூரி பேட்டை போயி சேர்ந்தார்கள்.. அங்கே ஒரு Lodge ல் ரூம் போட்டார்கள்.. அந்த Lodge வடிவம் உடையது..௨ சகோதரர்களுக்கு சொந்தமானது..ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி.. இங்கே "சரக்கு" கூட்டி வந்தால் அங்கே அந்த சகோதரன் போலீசுக்கு போட்டு குடுத்து விடுவான்.. (Vice Versa) எனவே "Guide" ஆலோசனைப்படி 2 விலும் தலா 2 ரூம் போட்டனர்..(எல்லாம் ஒரு Balance செய்வதற்காக தான் ..)

ஆயினும்..அன்று இரவு அவர்களின் "லபோ .. லபோ.. லப்பினக்கா.." பயணம் இனிதே தொடங்கியது..இதற்க்கு நண்பரின் அண்ணன் (Guide) தான் காவல்..

இதற்க்கு இடையில்.. தண்ணி பார்ட்டி தொடங்கி நடந்து கொண்டிருக்க.. 5 men Army யிலிருந்து ஒரு மெம்பர் மட்டும் தனியாக ஒரு குவார்ட்டர் , சாப்பாடு (தூக்கு போசியில்) உஷார் பண்ண.., அவரை நன்றாக நாலு சாத்து சாத்தியத்தில்..அவர் சொன்னது..

"மச்சான் ! எனக்கும் வரப்போற சரக்குக்கும் சாப்பாடு டா ! !! அதுக்கு ராத்திரில பசிச்சா சோத்துக்கு அலைய முடியாது இல்ல...அதான் இந்த ஏற்பாடு"..

என்ன மனித நேயம் பார்த்தீர்களா இவருக்கு ??

பயணம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் வந்தது வினை வேறு வடிவில்.. இந்த ட ட Lodge சகோதரர்களுக்கு வேண்டாத வேறு ஒருவன் போலீசுக்கு போட்டுக்கொடுத்து விட... உடனே ரெய்டு... போலீசை கண்ட அண்ணன் "Guide" மாயமாகிவிட..

5 men Army வசமாக மாட்டிக்கொண்டது...

"Payment வேறு பண்ணியாச்சு.., சரக்கை திரும்ப அனுப்ப முடியாது"

என்று..ஒருவன் அவனுடைய ஜோடியை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓட.., மற்றொருவன் டீயில் கயிற்றை நனைத்து டேம்போரரி தாலிக்கயிறு ரெடி பண்ண...மற்றவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க...

போலீசும் வந்து தொலைக்க.. இரண்டு லோட்ஜ் சொந்தக்காரர்களும்..போலீஸ் பின்னே சரிசெய்வதற்க்காக ஓட...கடைசியில் வந்தது கமிஷனர் என்று தெரிந்த உடனே.. லோட்ஜ் ல் இருந்த அனைத்து ஊழியர்களும்..ஜூட்... கமிஷனர் "சர்ச்" ஆர்டர் கொடுக்க..மேலும் டென்ஷன்....

அப்பாலே சொல்லுறேன்..