Monday, 9 June 2008

தற்போதைய தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்கள் திருடர்களா ??

தற்போதைய தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்கள் திருடர்களா ??

இது என் மனதில் ரொம்ப நாட்களாகவே இருக்கின்ற ஒரு கேள்வி... நானும் ஒரு இசைக் கலைஞன் தான்.. மொழி வேறுபாடு இன்றி எந்த நாட்டு இசையையும் கேட்பது என் வழக்கம்... அப்படி கேட்பதால் யார் எங்கே திருடுகிறார்கள் என்பது தெள்ள தெளிவாகவே தெரிகிறது... இது சம்பந்தமாக சில இசை அமைப்பாளர்களிடம் நான் நேரடியாகவே கேட்டேன்.. வந்த பதில் சற்று அதிர்ச்சியாகவே இருந்தாலும்..அவர்கள் கூற்றில் கொஞ்சம் (10%) நேர்மை இருந்ததாகவே பட்டது..

ஆயினும், நான் ஒரு வலைத்தளத்தை பல நாட்களாக படித்து வருகிறேன்.. அது..
www.itwofs.com
இதன் உரிமையாளர் கார்த்திக்.. இவர் கோவையை சேர்ந்தவர் என்பது அவருடன் எ-மெயில் மூலம் தொடர்பு கொண்டபோது புலப்பட்டது.. இவர் இதை ஒரு பொழுது போக்காக தொடங்கியதாக கூறுகிறார்..தற்போது மிகவும் சீரியஸ் ஆக ஆகி விட்டது..போலும்.. இவர் அதிகமாக தோலுரித்து காட்டியது தற்போதைய ஹிந்தி இசை அமைப்பாளர்களே.. இவர் கண்டு பிடிப்புகளுக்கு இசைஞானி யும், எம்.எஸ்.வி யும், A. R. ரகுமானும் கூட தப்பவில்லை...

இவரை ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் அடையாளம் கண்டு கொண்டு, கரன் தாப்பார் நடத்தும் கலந்துரையாடல் நிகழ்ச்சி யில் இரண்டு ஹிந்தி முன்னணி இசை அமைப்பாளர்களுடன் இவரை நேர்கான வைத்தது..சிறப்பம்சம்.. இவர் நேரடியாகவே அந்த இசை அமைப்பாளர்களை (பிரீத்தம், அன்னு மாலிக்..) குறிப்பிட்டு கேட்க..ஒருவர் மழுப்ப, இன்னொருவர் சப்பை கட்டு கட்ட.. ரொம்ப சுவாரசியமாகவே இருந்தது.. கீழே அதன் You Tube தொடர்பை கொடுத்துள்ளேன்..

http://youtube.com/watch?v=z_cpKFQ0hjE
http://youtube.com/watch?v=zrq9zB43DWo
http://youtube.com/watch?v=CfH8GPHcchM

இது போன்ற நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்கள் ஏன் நடத்துவதில்லை என்று புரியவில்லை... (பொழைப்பு போய் விடுமோன்னு பயமோ ??) ஆயினும், நான் சந்தித்த சில தமிழ் இசை அமைப்பாளர்கள் கூறியது..

" சார் ! Producer , director என்ன கேட்குராரோ அதை தான் நாங்க செய்யுறோம்.. எங்களோட கற்பனையை சரியா புரிஞ்சி கிட்ட இயக்குனர்கள் சில பேரே !! மத்தவங்கள் எல்லாம் ஞான சூனியங்கள்..தான் .. எங்களுக்கும் பொழைப்பு ன்னு ஒண்ணு இருக்கிலே..அதையும் பாக்கணும்.."

இதை சொன்னவர் ஒரு தற்போதைய முன்னணி தமிழ் இசை அமைப்பாளரே.. ஆச்சர்யமாக இருந்தது எனக்கு... இசை ஞானி யும், எம்.எஸ்.வி யும் உயிரை கொடுத்து இசை அமைத்த காலம் போய் மனதில் நிற்காத பாடல்களை கேட்கும் நிலை வந்து விட்டதே என்று...

உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. மீண்டும் தொடர்வோம்...


5 comments:

SP.VR. SUBBIAH said...

காப்பி என்று எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. உந்துதல்களினால் (inspiration)
சில சமயம் அப்படி இசையமைக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டு விடுவது உண்டு!

வெங்க்கி said...

//காப்பி என்று எல்லாவற்றையும் சொல்லிவிட முடியாது. உந்துதல்களினால் (inspiration)
சில சமயம் அப்படி இசையமைக்க வேண்டிய கட்டாயம் நேரிட்டு விடுவது உண்டு!//

வாங்க .. சுப்பையா அண்ணே !! உந்துதல் என்பது தப்பை மறைக்க இசை அமைப்பாளர்கள் சொல்லும் வார்த்தை.. நீங்கள் அந்த இணைய தளத்தை (வ்வ்வ்.இத்வோபிஸ்.காம்) சென்று அளசினிர் களானால் புரியும்.. எந்த அளவு திருட்டு நடக்கிறது என்று.. இதில் வட இந்திய இசை அமைப்பாளர்களே அதிகம்..(நாம் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம்) எனினும் எம். எஸ்.வி மற்றும் இளையராஜா விடம் மட்டுமே இந்த உந்துதல் (inspiring from other genere music) இருந்தது.. மற்றவர்கள்..அடிப்பது அட்ட காப்பி தானே ??

கிரி said...

திருட்டும் திரை உலகமும் பிரிக்க தவிர்க்க முடியாத ஒன்று.

//ஆயினும், நான் ஒரு வலைத்தளத்தை பல நாட்களாக படித்து வருகிறேன்.. அது..

://www.itwofs.com//

போய் பார்த்தேன் ..செம திருட்டா இருக்கே!!! கில்லாடியா இருக்காங்கய்யா எல்லோரும்.

எனக்கு இவர் எப்படி இத்தனை பாட்டையும் கண்டு பிடித்து அதை தனது வலையில் ஏற்றி இருக்காருன்னு..ரொம்ப ஆச்சர்யமா இருக்கு

dondu(#11168674346665545885) said...

மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளர் வேதா அவர்கள். அவர் ஒரு சமயம் கூறினார். ப்ரொட்யூசரே ஒரு ஹிட் ஹிந்தி ட்யூனை கொடுத்து அதே ம்யூசிக்கை போடுமாறு கூறுவார் (முக்கியமாக மதன்மோகனின் சங்கீதம்தான் இதில் காப்பி அடிக்கப்படும்).

இதில் பல பாலிடிக்ஸ் உண்டு. கடையில் கிடைக்கும் டப்பு எல்லா ஆட்சேபணைகளையும் சரி செய்யும் என்பது மட்டும் நிஜம்.

முக்கியமாக பாலக்காட்டு மாதவன் நாயர் போட்ட ஒரு ட்ராமா ட்யூனை எஸ்.டி. பர்மன் காப்பியடித்து "ரூப் தேரா மஸ்தானா, ப்யார் மேரா தீவானா" என்ற பாட்டை சமீபத்தில் 1969-ல் வந்த ஆராதனா படத்தில் போட்டது மட்டும் நியாயமோ? :)))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வெங்க்கி said...

வருகைக்கு நன்றி டோண்டு சார் ! நீங்க இந்த சின்னவன் பதிவுக்கு வந்ததில சந்தோஷம்... அதுல பாருங்க.. இளையராஜா வுக்கும் கல்யாண்ஜி - ஆனந்த்ஜி வுக்கும் இடையே ஒரு ஒப்பந்தமே இருந்ததாம்.. ஒருவர் பாடலை இன்னொருவர் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று.. அதான் இவரோட இளையநிலா பாடலை ஹிந்தி யில் நீலே நீலே அம்பர் என்று கொலை செய்து இருப்பார்கள்.. ( நான் ௧௨ ஆண்டுகள் திரை இசைத்துறையில் இருந்தவன் என்ற முறையில்.. நிறைய உள்குத்து சமாசாரங்கள் தெரியும்,.. பின்னால் எழுதுகிறேன்..)

கார்த்திக்கோட www.itwofs.com போய் பாத்தீங்களா ??