Wednesday, 18 June 2008

ஞானியின் உருப்படாத யோசனைகளை...!!

கீழே காணும் ஆலோசனைகள் பெட்ரோல் விலை அதிகரிப்பு குறித்து (எல்லாமே இலவசம் தான் !!) திரு.ஞானி அவர்கள்18.06.2008 குமுதம் இதழில் - பக்கங்களில் எழுதியவை.. எனது கமெண்ட் சிகப்புநிறத்தில் அடைப்பு குறிக்குள்...

"சிக்கனத்துக்கு என் யோசனைகள் இதோ. இதை விட இன்னும் சிறப்பான யோசனைகளை எல்லாரும் யோசிக்கலாம்."

1. கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.

(கேக்க நல்லா தான் இருக்கு .. ஆடோவில பிளாஸ்டிக் கேன் எடுத்துனு வந்து பெட்ரோல் வாங்கிட்டு போயி கார்ல போடுவான் நம்ம ஆளு..உலகத்துல எல்லா தகிடு தத்தமும் நம்ம ஆட்களுக்கு அத்துப்படி..அதனால இவரோட இந்த யோசனை சாத்தியமில்லை..)

2. பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது.

(இது தேவலாம்.. ஆனா அரசியல் வாதிங்க பிள்ளைகள், பணக்கார பிள்ளைகள் எல்லாம் இதுல சேத்தியா ??)

3. சைக்கிளில் சென்று வரும் தொலைவில் வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த வட்டாரப் பள்ளி,கல்லூரிகளில் அட்மிஷன் தரப்படவேண்டும்.

(சுய நிதி கல்லூரி முதலாளிகள் (அதாங்க..நம்ம அரசியல் வாதிங்க தான்) முதல்ல இதுக்கு சர்வதேச கோர்ட் வரை போயி ஸ்டே வாங்கிடுவாங்க.. பிசினஸ்பாதிக்குமில்ல ??)

4. அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

(சான்ஸ் இல்ல.. இவுங்க பதவிக்கி வர்றதே இந்த சுகத்துக்காகத்தான்...)

5. எந்த நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

(அப்புறம் கட்சிக்காரங்க என்னிக்கித்தான் ஆட்சியோட பலான அனுபவிக்கிறதாம் ? அதாங்க ! contract..துட்டு சமாசாரம்..இதுல தான காஸ் பாக்குறாங்க ??)

6. முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்களுக்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.

(வேற விஷயம் ஏதாவது உருப்படியா சொல்லிங்க ஞானி சார் !!)

7. ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.

(இந்த விதி இந்தோனேசியா தலை நகர் ஜகர்தா வில் ஏற்கனவே உண்டு.. காரில் 3 பேருக்கு கீ ழே பயணிக்க கூடாது என்று.. அப்படி பயணித்தால் அபராதமும் உண்டு.. இத்தனை உள்ளூர் மக்கள் சாதகமாக எடுத்துக்கொண்டு சாலை ஓரங்களில் கட்டை விரலை காட்டியவாறு நிற்பார்கள் [முக்கியமாக விடலை பசங்கள்].. எந்த கார் 3 பேருக்கு குறைவாக செல்கிறதோ அதில் ஏறிக்கொள்வது, கார் சொந்தக்காரர் 5 பத்தோ கொடுப்பார், சவாரிக்கு சவாரி இலவசம், காசும் கூட, கார் சொந்தக்காரருக்கு 3 பேர் கணக்கும் ஆகிவிடும்..ஒரு புதிய சமூக தொல்லைக்கு அடித்தளம் போடுறமாதிரி இருக்கு...)

3 comments:

கிரி said...

//கார், டூவீலருக்கு லிட்டர் விலை: ரூ 100. விமான பெட்ரோலுக்கு சலுகை எதுவும் கூடாது. ஆட்டோ, சரக்கு லாரிகள், ரயில் எஞ்சின் முதலியவற்றுக்கான பெட்ரோல், டீசலுக்கு மட்டுமே சலுகை விலை.//

அது சரி..அருமையான யோசனை

//பள்ளி, கல்லூரி மாணவர்கள் யாரும் டூவீலர் ஓட்ட அனுமதியில்லை. சைக்கிளை மட்டுமே பயன்படுத்தலாம். உடலுக்கும் நல்லது. பர்ஸுக்கும் நல்லது//

இது சரி தான்.

//இது தேவலாம்.. ஆனா அரசியல் வாதிங்க பிள்ளைகள், பணக்கார பிள்ளைகள் எல்லாம் இதுல சேத்தியா //

ஹி ஹி ஹி சரியான கேள்வி...இவங்களை கார் ல கொண்டு வந்து விட்டு சென்று விடுவாங்க அப்படி ஒரு நிலை வந்தால்.

?//அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் அன்றாடம் பஸ், ரயில்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

(சான்ஸ் இல்ல.. இவுங்க பதவிக்கி வர்றதே இந்த சுகத்துக்காகத்தான்...)//

நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே

//எந்த நகரிலும் எந்தச் சாலையிலும் புதிய மேம்பாலங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குக் கட்டக் கூடாது. புதிய உள்ளூர் ரயில் திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

(அப்புறம் கட்சிக்காரங்க என்னிக்கித்தான் ஆட்சியோட பலான அனுபவிக்கிறதாம் ? அதாங்க ! contract..துட்டு சமாசாரம்..இதுல தான காஸ் பாக்குறாங்க ??//

ஹய்யோ ஹய்யோ இவரு சொல்வதை நினைத்தால் சிப்பு சிப்பா வருது ஹி ஹி ஹி

//முக்கிய நகரங்களுக்கு இடையே சரக்கு ரயில்களுக்கு என்று தனி ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும்.


(வேற விஷயம் ஏதாவது உருப்படியா சொல்லிங்க ஞானி சார் !!)//

ஹி ஹி ஹி

//ஒரு காரில் ஒருவர்/இருவர் மட்டுமே பயணம் செய்வதைக் கண்டால், ஸ்பாட் ஃபைன் போடப்படும்.//

ஹி ஹி ஹி என்னங்க இவரு இந்தியா வை பற்றி தான் பேசிட்டு இருக்காரா..இதெல்லாம் நடக்கிற காரியமா.

இவரு பேரு என்ன ஞானியா :-))))

வீ. எம் said...

சூப்பர், வித்தியாசமான பர்வையில் அவரின் யோசனைகள்

வெங்க்கி said...

வருகைக்கு நன்றி வீ.எம்..