- சென்னையில் ஏகப்பட்ட மாற்றங்கள்.. பொதுவாக கலைஞர் ஆட்சி சிறப்பாகவே செயல் படுகிறது.. (டிராபிக் போலீஸ் மட்டும் திருந்தவில்லை)
- கோயம்பேடு ஆம்னி பஸ் நிலையத்தில் 40 பஸ் நிற்கும் இடத்தில் 400 பஸ்கள் முண்டியடித்துக்கொண்டு செல்வது .. ஒரே Registration ல் 4 பஸ்கள்..
- இரவு நேரங்களில் பஸ் நிலையத்தில் அரவாணிகளின் தொல்லை.....
- கழிப்பிட கட்டணங்கள் 2 ரூபாய் .. அதனால்.. ஜனங்கள்..அருகிலுள்ள திடலில் ஹாய்யாக ..காற்றோட்டமாக .... எனவே.. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரவு நேரங்களில் கவனமாக நோக்கி செல்லவும்..இல்லையெனில் நெருப்புக்கு இரையாகி விடுவீர்கள்...
- எங்கு பார்த்தாலும் ட்ராபிக்...கூட்டம்..மால்கள் எல்லாம் ரொம்பி வழிகின்றது..(வேறு எதற்கு ?? வெய்யிலுக்கு இதம்மா A/c ல நிக்க தான் )
- 50 ரூ க்கு குறைந்து நல்ல சாப்பாடு கிடையாது..
- முருகன் இட்லி கடை டிபன் சூப்பர் !!
- அதிசயமா தி. நகர் ரேஷன் கடை ஆபீஸ் ல என் நண்பர் அவரோட change of அட்ரஸ் அரை மணி நேரத்துல செஞ்சிட்டார்.. இடைத்தரகர்களை உள்ளே விடுவதில்லை... நேராக சென்றால் காரியம் ஆகி விடுகிறது...வாழ்க கலைஞர் அரசு.. (Even R T O ஆபீஸ் லேயும் தான்)
Tuesday, 3 June 2008
மறுபடியும் கங்காரு பைக்குள்ளே..வந்தாச்சு..(1)
12 நாள் இந்தியா வில சுத்தின பிறகு, திரும்ப பெர்த் நகர் (ஆஸ்திரேலியா) வந்தாச்சு...42 டிகிரி இலிருந்து 17 டிகிரிக்கு...வந்தது..சுண்ணாம்பு காளவாயிலிருந்து ஐஸ் பெட்டிக்குள்ளே வந்த மாதிரி இருக்கு... இந்த 12 நாட்களிலே ஏகப்பட்ட அனுபவங்கள்... அதுல சில... பின்னாடி விரிவா எழுதுறேன்...
Labels:
அனுபவங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment