Tuesday, 1 July 2008

உலக மகா ஓட்டைகள்..எட்டு.. :))

அறிவு பூர்வமான பதிவு... கடைசியிலே கும்மாங்குத்து இருக்கு..


கிம்பர்லி - பிக் ஹோல்..என்று பெயர்.. தென் ஆப்ரிக்கா வில் உள்ளது.. மனிதனால் தோண்டப்பட்ட துளைகளில், இதுவே ஆழமானது..1097 மீ ஆழாம்.. 3டன் வைரங்களை இதுவரையில் நமக்கு கொடுத்துள்ளது.. 1914 ல் மேலும்தோண்டுதல் கைவிடப்பட்டது..

***********************************************************************************

குளோரி ஹோல்.. அமெரிக்கா வில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளமோண்டி செல்லோ அணையில் உள்ளது.. (நம்ம ஊர்ல மேட்டூர் அணையில் இந்தமாதிரி சின்ன அளவில் ஒன்று உள்ளது) இது நொடிக்கு 14,400 கன அடி நீரைவிழுங்கும் கொள்ளளவு உள்ளது..

***********************************************************************************

பிங்காம் சுரங்கம்.. அமெரிக்கா வில் உட்டா மாகாணத்தில் உள்ளது.. 1863 ல்நோண்ட ஆரம்பித்தவர்கள் இன்னமும் நோண்டி எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள் .. (கனிமத்தை) கிட்டத்தட்ட 1 கி.மீ ஆழமும் , 3 கி.மீ விட்டமும்கொண்டது..

***********************************************************************************

பெரும் நீல துளை.. (கிரேட் ப்ளூ ஹோல்)..இருப்பது பெளிஜ் என்ற மத்தியஅமெரிக்கா நாட்டில்.. இது மாதிரி பல உலகெங்கிலும் இருந்தாலும்.. இயற்கையாக கடலில் உருவான மிக பெரிய துளை இதுவே..

***********************************************************************************
இதைப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம்..செர்பியா நாட்டில் உள்ள திறந்தவைர சுரங்கமான மிர்னி என்பதே இது.. 525 மீ ஆழமும், 1200 மீ மேல்விட்டமும் உடையது... இந்த ஓட்டைக்கு மேல் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாம்..(சில முறை ஹெலிகாப்டர் களை உள்ளுக்கு இழுத்துவிட்டதால்..)

***********************************************************************************
டியவிக் சுரங்கம்..கனடா நாட்டில் உள்ளது.. இந்த துளைக்குள்ளே..ஒரு போயிங்737 விமான ஓடு தளமே உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. சுற்றி உள்ளநீர் பணியாக உறைந்து இருக்கும் பொது.. கண்கொள்ளா காட்சியாம்..

***********************************************************************************
சிங்க் ஹோல்.. இது இந்த வருட ஆரம்பத்தில் குட்டா மாலா (Guatemala) நாட்டில் ஏற்பட்ட நில உள்ளிழுப்பு.. இது பல சொத்து சேதங்களையும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது.. :(((

***********************************************************************************

கடைசீயா இந்த ஓட்டை தான் மேலே இருப்பவைகளை விட மிக மிக பெரியது..

இதை ஆங்கிலத்தில் அழாகாக ஆஸ் ஹோல் என்பார்கள்.
. இது ஏற்படுத்திய சேதம் அளவிட முடியாதது..இன்னமும் இது ஓயவில்லை.. கீழே போய் பாருங்களேன்.. என்ன என்று..

.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.



இவர் வாயை மூட இது வரை ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை..

5 comments:

கிரி said...

சூப்பர் பதிவு ..

இருங்க கொஞ்ச நேரம் கழித்து வந்து விரிவா பின்னூட்டம் போடுறேன்..

உங்க தமிழ் மண பிரச்சனை எந்த அளவில் உள்ளது?

கிரி said...

//1914 ல் மேலும்தோண்டுதல் கைவிடப்பட்டது.. //

ரொம்ப தோண்டிட்டாங்க போல இருக்கு :-)))

//இது நொடிக்கு 14,400 கன அடி நீரைவிழுங்கும் கொள்ளளவு உள்ளது.. //

அடங்கொக்கமக்கா! பார்த்தால் பயமா இருக்கு

//1863 ல்நோண்ட ஆரம்பித்தவர்கள் இன்னமும் நோண்டி எடுத்துக்கொண்டுஇருக்கிறார்கள் .. (கனிமத்தை) கிட்டத்தட்ட 1 கி.மீ ஆழமும் , 3 கி.மீ விட்டமும்கொண்டது//

தோண்டி அந்த பக்கம் வராம இருந்தா சரி

//இயற்கையாக கடலில் உருவான மிக பெரிய துளை இதுவே..//

டக்கரா இருக்கு

//இந்த ஓட்டைக்கு மேல் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாம்..(சில முறை ஹெலிகாப்டர் களை உள்ளுக்கு இழுத்துவிட்டதால்..)//

அப்படியா! நம்ப முடியலை..என்ன காரணத்தால இழுக்குது

//சுற்றி உள்ளநீர் பணியாக உறைந்து இருக்கும் பொது.. கண்கொள்ளா காட்சியாம்..//

அப்படி இல்லாமையே சூப்பரா இருக்கு

//இந்த வருட ஆரம்பத்தில் குட்டா மாலா (Guatemala) நாட்டில் ஏற்பட்ட நில உள்ளிழுப்பு.. இது பல சொத்து சேதங்களையும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது//

அய்யய்யோ

//இவர் வாயை மூட இது வரை ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை.. //

:-))))))))))))))))))))

வெங்கி சூப்பர் பதிவு ..உங்கள் தமிழ்மண பிரச்சனை சரி ஆனால், பதிவுலகில் பட்டய கிளப்பலாம்

வெட்டிப்பயல் said...

க்ளைமாக்ஸ்ல அடிச்சி ஆடிட்டீங்களே :-)

வெட்டிப்பயல் said...

எல்லாமே பிரமாண்டமா இருந்துச்சு ;)

வெங்க்கி said...

//அப்படியா! நம்ப முடியலை..என்ன காரணத்தால இழுக்குது //

எல்லாம் சக்க்ஷன் தியரி தான் .. ஆழமாக இருப்பதாலும், அந்த மண்டலத்தில் உள்ள காற்று உள்ளுக்கு இழுக்கப்படும் போது.. காற்றில் உள்ள எந்த பொருளும் உள்ளுக்கு இழுபட வாய்ப்பு உண்டு..

-------
தமிழ்மணம் என்னோட ஈ-மெயில் களை கண்டுகிடவே மாட்டேன்கறாங்க..கெஞ்சி கால்ல விழுந்து மெயில் எழுதி பாத்துட்டேன்.. நான் ரொம்ப பாவப்பட்டவன் போல..என் விதி அவ்வளவு தான் ...:(((((

-------

வருகைக்கு நன்றி கிரி, வெட்டி..(பாலாஜி காரு)