Friday, 20 June 2008

ஜகர்தா வா இல்லை ஜாலி கர்தாவா ?? பாகம் - 1

ரொம்ப நாளா எனக்கு ஒரு கேள்வி.. இந்தோனேசியா தலை நகரான ஜகர்தா வுக்குவேலைக்கு போன என் நண்பர்கள் அங்கேயே செட்டில் ஆகி விட்டனர்.. அப்படிஎன்ன மர்மம் இருக்குன்னு தெரியல.. நானும் சென்ற வருடம் அங்கே வேலைபார்த்த போது தான் புரிந்தது..
  • டாலர் சம்பளம்..
  • வருமான வரியை கம்பெனி யே கட்டிடும்..
  • வீடு குடுத்துடுவாங்க..
  • விலை வாசி ஒன்னும் அதிகம் இல்லை. அருகில் உள்ள சிங்கப்பூர், மலேசியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது..
  • வீட்டு வேலைக்கும், மேற்படி வேலைக்கும் ஆள் வைத்துக்கொள்ளலாம்..
  • contract போட்டு கலியாணமும் பண்ணிக்கலாம்.. (புள்ளை மட்டும் பெத்துக்காதபாத்துக்கணுமாம்., புள்ளை பெத்துட்டா, நாம தான் தூக்கினு போகணுமாம்.. இதெல்லாம் அந்த அரசாங்கத்தோட சட்டமாம்)
  • பெட்ரோல் விலை அங்கே ரொம்ப கம்மி..30 ரூபாய் க்குள் தான்..
  • கார் வைத்துக்கொள்வது..சர்வ சாதாரணம்.. (ஆனா டிரைவர் கண்டிப்பா வேணும்.. டிராபிக் ஜாம் ரொம்ப பிரசித்தம் அங்கே.. தாய்லாந்து தலைநகர் பாங்காக் விட மோசம்..)
  • சுத்தி பாக்க நெறையா இடம் இருக்கு அங்கன..
  • துபாய், சவூதி யை விட எவ்வளவோ தேவலாம்..தட்ப வெட்ப நிலையை சொல்லுறேன்..


இன்னமும் சுவாரசியமான தகவல்கள் இருக்கு.. வரேன் மெதுவா..

7 comments:

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

கொடுத்து வச்ச மகராசன்கள் !!!!!
ம்ம்ம்ம்ம்
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்

கிரி said...

//விலை வாசி ஒன்னும் அதிகம் இல்லை. அருகில் உள்ள சிங்கப்பூர், மலேசியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது..//

உண்மை தான்.

//மேற்படி வேலைக்கும் ஆள் வைத்துக்கொள்ளலாம்..//

என்னது ???????????????????

இப்படி எல்லாம் இருந்தாலும் எங்கயாவது பிரச்சனை இருக்குமே !!!

Samuthra Senthil said...

//சுத்தி பாக்க நெறையா இடம் இருக்கு அங்கன..//

எந்தெந்த இடம்... தாங்கள் சுற்றிப்பார்த்த இடங்களையும், அந்த நேரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் பதிவிட்டால் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் கீ&வென்.

வெங்க்கி said...

வருகைக்கு நன்றி அருவை பாஸ்கர்.

நிருபரே ,

ஒவ்வொரு புல்லெட் பாயிண்ட் டுக்கும் ஒவ்வொரு விவரமான பாகம் எழுத போறேன்.. பெரும்பாலும் சுவையான தகவல்களா இருக்கும்

rapp said...

ஆஹா, எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா இந்த பூகம்ப சமாச்சாரம்தான். அதை யாரவது என்னை போன்ற சாதாரணமானவர்களுக்கும் புரியற மாதிரி சொன்னா நல்லா இருக்கும்.

rapp said...

கீவென்,புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்க

வெங்க்கி said...

வருகைக்கு நன்றி ராப் :

இந்தோனேசியா வின் சீதோஷ்ண நிலைகளை பற்றி பின்னர் விரிவாகவே எழுதுகிறேன்.. நிறைய பேர் பூகம்பத்தை நினைத்து பயப்படுகிறார்கள்.. கண்டிப்பாக இது சம்பந்தமாக சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.. (அடிப்படையில் நான் ஒரு கட்டுமான பொறியாளன் என்ற முறையில்)