- ஷில்பா ஷெட்டி யை நாய் கடித்து விட்டதாம் .. ஏன் என்று கெட்ட போது.."நாய்க்கு ஹார்மோன் கோளாறு" என்று அவர் கூறியதாக தகவல்..
(நாய்க்கு ஹார்மோன் கோளாறா அல்லது ஷில்பாவுக்கு ஹார்மோன் கோளாறா ? பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு பின்னரே இவரது நடவடிக்கைகள் வித்தியாசமாகவே உள்ளதே ? எதாவது நியூஸ் குடுத்துக்கிட்டே இருக்காரு..?)
- திருப்பதியில் நடிகை ரோஜா மது பான கடைகளை அடித்து நொறுக்கினார்..
(ம்ம்ம் ... முன்ன பண்ண பாவத்துக்கு இப்போ பரிகாரம் தேடுராராக்கும்)
- தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் ராம.நாராயணனை எதிர்த்து நடிகை ராதிகா போட்டியிடவுள்ளார்..
(வூட்டுக்காரர் அரசியல்வாதி, வூட்டுக்காரம்மா சினிமா வழி உள்குத்து அரசியலா?)
- மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
(எம்.ஜி.ஆர் உயிரோட இல்லை ங்கற தைரியத்துல தான் ஆல்லாளுக்கு நான் கருப்பு எம்.ஜி.ஆர், நான் பச்சை எம்.ஜி.ஆர் ன்னு சொல்லிக்கிட்டு திரியுறாங்க.. கேப்டன்.. யு டூ ப்ருட்ட்டஸ் ? தில் இருந்தா உங்க "நரசிம்மா" படத்த நீங்களே ஒருமுறை பாருங்க..)
- தசாவதாரம் ஒருவழியாக ரிலீஸ் ஆனது..தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நெஞ்சை பிடித்துக்கொண்டு அலைவதாக தகவல்..
(10 வேஷம் போடுறேன்னு ஆஸ்கார் ரவியை 11 வது வேஷம் போட வைத்து விட்டார் போலும் கமல்.. அதென்ன OSCAR லேந்து AASKAR ? எங்க ஊருல ரேஷன் கடையில சக்கரை அளக்குர்றவான் பேரு அஸ்கா ரவி :)))
இப்போதைக்கு அவ்வளவு தான்..அடுத்த மாசம் பாப்போம்..
பின் குறிப்பு : இது எல்லாம் எங்க காட்டூர் கருப்பண்ண சாமிக்கு எழுதி கிட்டதாக்கும்..
5 comments:
//தில் இருந்த உங்க "நரசிம்மா" படத்த நீங்களே ஒருமுறை பாருங்க//
நிஜமாவே உணர்ந்து எழுதி இருக்கீங்க. சூப்பர்!
//10 வேஷம் போடுறேன்னு ஆஸ்கார் ரவியை 11 வது வேஷம் போட வைத்து விட்டார் போலும் கமல்//
அருமையான பஞ்ச்!
//ஷில்பா ஷெட்டி யை நாய் கடித்து விட்டதாம் .. ஏன் என்று கெட்ட போது.."நாய்க்கு ஹார்மோன் கோளாறு" என்று அவர் கூறியதாக தகவல்..//
நாய்க்கு ஒன்றும் ஆகவில்லையே :-))))))
//திருப்பதியில் நடிகை ரோஜா மது பான கடைகளை அடித்து நொறுக்கினார்//
ஏன்? கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?
//தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் ராம.நாராயணனை எதிர்த்து நடிகை ராதிகா போட்டியிடவுள்ளார்..//
இதுக்கு பேர் தான் குடும்ப அரசியலா?
//மக்கள் இன்னொரு எம்.ஜி.ஆரை எதிர்பார்க்கிறார்கள். எனவே தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றார்கள் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்//
யாரு இந்த மாதிரி யார் சொல்லுறாங்கன்னு சொன்ன நல்லா இருக்கும், மக்கள் னு சொல்றத இவங்க வீட்டுல உள்ளவங்கலையா?
//தசாவதாரம் ஒருவழியாக ரிலீஸ் ஆனது..தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நெஞ்சை பிடித்துக்கொண்டு அலைவதாக தகவல்..//
ஹி ஹி ஹி தாணு உங்களை சந்தித்தாரா?
//இருந்த உங்க "நரசிம்மா" படத்த நீங்களே ஒருமுறை பாருங்க..///
படம் எடுக்கிறது தான் எங்க வேலை.. நொந்து நூடுல்ஸ் ஆகுறது எல்லாம் மக்கள் வேலை
//ஹி ஹி ஹி தாணு உங்களை சந்தித்தாரா?..//
இல்ல..அஸ்கா ரவி.. அதாங்க எங்க ஊருல ரேஷன் சக்கரை அளக்கிறவர்..
தாணு.. இன்னமும் தெம்பா திரியிராரு போல...."கந்தசாமி" வந்தா தெரியும்.. இல்லேன்னா ஷங்கருக்கு ஒரு படம் தயாரிக்க சொல்லணும்..
பின்குறிப்பு : நரசிம்ம படத்துல கேப்டன் கை பட்டு Power transformer வெடிக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கும்.. அத்த விட..இன்னமும் நெறையா மொக்கை சீன் கலை கேப்டன் வெசசிருப்பாறு அந்த படத்துல.. முடிஞ்சா நீங்களும் ஒரு வாட்டி பாருங்க..அந்த படத்த..
வருகைக்கு நன்றி rapp !!
//முடிஞ்சா நீங்களும் ஒரு வாட்டி பாருங்க..அந்த படத்த..//
வெங்கி நமக்குள்ள தாவது பிரச்சனை என்றால் பேசி தீர்த்துக்கலாம் :-))
Post a Comment