Wednesday, 4 June 2008

லபோ .. லபோ.. லப்பினக்கா.. (தொடர்ச்சி..)

நீங்க இதை படிக்கிறதுக்கு முன்னால ஒரு டிஸ்கி.. இது ஜஸ்ட் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது (உண்மை சம்பவம் தான்!!) எந்த ஒரு தனி மனிதரின் மனதை புண்படுத்தும் நோக்கம் இதில் கிடையாது..

1990 வருடம்.. எனக்கு திருமணம் ஆவதற்கு முன்.. சென்னை அண்ணா நகரில் வீடு எடுத்து தங்கி இருந்தோம்.. (5 பேர் நிரந்தர மாகவும், லோக்கல் நண்பர்கள் வந்து போவதுண்டு). இதில் திருமணம் ஆகும்வரை பெண் வாடையே வேண்டாம் என்று வாழ்ந்தவர்கள் நாங்கள் 4 பேர்.. (நம்புங்கய்யா !! அப்படி சந்தேகமா பாக்காதீங்க..) மீதமுள்ள 5 பேர் அது தான் உலகம் என்று முறுக்கிக்கொண்டு தென்னிந்தியா முழுக்க அலைந்தவர்கள்...

அப்போது என் நண்பர் ஒருவரின் அண்ணன் சென்னையில் Travels கம்பெனி வைத்து இருந்தார்.. அவருடன் இந்த 5 பேர் கோஷ்டி..ஆந்திராவை நோக்கி புறப்பட்டது.. இந்த பிரயாண த்திற்காக பிரத்தியேக மந்திராலோசனை செய்தார்கள்.. முடிவாக பெத்தாபுரம் வெகு தூரம் என்பதால், அருகில் உள்ள சிலக்கலூரி பேட்டை க்கு செல்வது என்று தீர்மானித்தார்கள்..
பிறகு ஒரு சனிக்கிழைமை காலை பூஜை போட்டு..5 men Army (இப்படி சொல்வோமே !!) கிளம்பியது..நண்பரின் அண்ணன் முன் கூட்டியே சொல்லி விட்டார்.. அவர் ஒன்லி Guide மட்டும்.. மேற்படி எதுவும் செய்ய மாட்டார் என்று... செலவு மிச்சம் என்று 5 men Army சந்தோஷப்பட்டது...

ஒரு வழியாக சிலக்கலூரி பேட்டை போயி சேர்ந்தார்கள்.. அங்கே ஒரு Lodge ல் ரூம் போட்டார்கள்.. அந்த Lodge வடிவம் உடையது..௨ சகோதரர்களுக்கு சொந்தமானது..ஒவ்வொருவருக்கும் ஒரு பகுதி.. இங்கே "சரக்கு" கூட்டி வந்தால் அங்கே அந்த சகோதரன் போலீசுக்கு போட்டு குடுத்து விடுவான்.. (Vice Versa) எனவே "Guide" ஆலோசனைப்படி 2 விலும் தலா 2 ரூம் போட்டனர்..(எல்லாம் ஒரு Balance செய்வதற்காக தான் ..)

ஆயினும்..அன்று இரவு அவர்களின் "லபோ .. லபோ.. லப்பினக்கா.." பயணம் இனிதே தொடங்கியது..இதற்க்கு நண்பரின் அண்ணன் (Guide) தான் காவல்..

இதற்க்கு இடையில்.. தண்ணி பார்ட்டி தொடங்கி நடந்து கொண்டிருக்க.. 5 men Army யிலிருந்து ஒரு மெம்பர் மட்டும் தனியாக ஒரு குவார்ட்டர் , சாப்பாடு (தூக்கு போசியில்) உஷார் பண்ண.., அவரை நன்றாக நாலு சாத்து சாத்தியத்தில்..அவர் சொன்னது..

"மச்சான் ! எனக்கும் வரப்போற சரக்குக்கும் சாப்பாடு டா ! !! அதுக்கு ராத்திரில பசிச்சா சோத்துக்கு அலைய முடியாது இல்ல...அதான் இந்த ஏற்பாடு"..

என்ன மனித நேயம் பார்த்தீர்களா இவருக்கு ??

பயணம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் வந்தது வினை வேறு வடிவில்.. இந்த ட ட Lodge சகோதரர்களுக்கு வேண்டாத வேறு ஒருவன் போலீசுக்கு போட்டுக்கொடுத்து விட... உடனே ரெய்டு... போலீசை கண்ட அண்ணன் "Guide" மாயமாகிவிட..

5 men Army வசமாக மாட்டிக்கொண்டது...

"Payment வேறு பண்ணியாச்சு.., சரக்கை திரும்ப அனுப்ப முடியாது"

என்று..ஒருவன் அவனுடைய ஜோடியை அழைத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓட.., மற்றொருவன் டீயில் கயிற்றை நனைத்து டேம்போரரி தாலிக்கயிறு ரெடி பண்ண...மற்றவர்கள் செய்வதறியாது திகைத்து நிற்க...

போலீசும் வந்து தொலைக்க.. இரண்டு லோட்ஜ் சொந்தக்காரர்களும்..போலீஸ் பின்னே சரிசெய்வதற்க்காக ஓட...கடைசியில் வந்தது கமிஷனர் என்று தெரிந்த உடனே.. லோட்ஜ் ல் இருந்த அனைத்து ஊழியர்களும்..ஜூட்... கமிஷனர் "சர்ச்" ஆர்டர் கொடுக்க..மேலும் டென்ஷன்....

அப்பாலே சொல்லுறேன்..

3 comments:

துளசி கோபால் said...

அஞ்சுபேர்ன்னு சொல்லி வீடு எடுத்துக்கிட்டு ஒன்பது பேர் இருந்தீங்களா?

வெங்க்கி said...

ஹீ..ஹீ..ஹீ.. டீச்சர்..!! இருந்ததென்னமோ.. கணக்கு படி அஞ்சு பேர் தான்.. ஆனா.. வந்து போற நண்பர் கும்பல சேர்த்த பன்னிரண்டு பேர் கிட்ட இருக்கும்.... ஆனா அந்த ஏரியா விலேயே.., நல்ல பேச்சுலோர் ன்னு பேர் வாங்கினவங்களாக்கும்...

கிரி said...

இந்த ரனகளத்திலையும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேட்குதா!!!

வெங்கி உங்களுக்கு விமான பயணத்தில் தான் அதிக அனுபவம் என்றால்.... பலே ஆளாக இருப்பீங்க போல ;-)