Thursday, 5 June 2008

லபோ..லபோ.. லப்பினக்கா..(முடிவு பகுதி)

போலீஸ் ரெய்டு வந்த பின்பு..செய்வதறியாது தவித்த 5 Men Army., திசைக்கொருவராய் பாய்ந்தது... முதலில் மாட்டியவர்..டீ யில் கயிற்றை நனைத்து தாலிக்கயிறு ரெடி பண்ணிக்கொண்டிருந்தவர்...இவருக்கு A.C விட்ட அறையில்..ஒரு பல் விழுந்து விட்டது.. கூடவே திட்டும் வேறு..

" எந்துக்குரா இக்கட ஓச்சாவா... மஜா சேசெதுக்கு வேறே ஜாகா லேதா ??"

பின்னர் மாட்டியவர்..இருவர்... அதே கவனிப்பு...

நான்காமவர் மொட்டைமாடியில் சென்று ஒளிந்து கொள்ள... அங்கே சென்ற கான்ஸ்டபிள் அவரை கண்டு மிரட்ட... கான்ஸ்டபிள் க்கு 100 ரூ கொடுத்து எஸ்கேப் ஆகி விட்டார்..நம் ஆள்...

ஐந்தாமவர் தான் இந்த நிகழ்வின் ஹை லைட் .. முன் கூறிய படி.. "சரக்குக்கு" சாப்பாடு எடுத்து சென்ற நண்பர்..ரெய்டின் போது.. இவரும், சரக்கும்.. உணவருந்திக்கொண்டு இருந்ததால்..நிஜ கணவன், மனைவி என்று நினைத்து போலீசார் விட்டு விட்டு சென்று விட்டார்கள்.. கூடவே., அட்வைஸ் வேறு..

"பாத்தா நல்ல பாமிலி மேன் மாதிரி..இருக்கீங்களே.... தங்க வேற Lodge கிடைக்கலையா ?"

ன்னு compliments வேற.....கமிஷனர் இந்த மாதிரி சொன்ன உடனே..நம் நண்பர் புளகாங்கிதம் அடைந்து விட்டார்...

ஒரு வழியா நடு ராத்திரி 1 மணிக்கு..இந்த கூத்து..முடிவுக்கு வர.. எஸ்கேப் ஆனா நண்பரோட அண்ணன் "Guide" திரும்ப வர.. சண்டை ஆரம்பித்தது...வந்ததுக்கு எல்லாம் வேஸ்ட்..ன்னு... திடீர்னு..கணக்கு பாத்தபோது..2 பேர் மிஸ்ஸிங்.. ஒருத்தர் மொட்டை மாடியிலேயே ஐக்கியம் ஆகிவிட.. சாப்பிட்டு விட்டு நண்பரும், சரக்கும் தங்கள் தொழிலில் பிசி ஆகிவிட.. மாட்டி அடி வாங்கி நொந்து பொய் உக்கார்ந்து இருந்த மூவருக்கும், Guide ஐடியா கொடுக்க "போயி அந்த ரெண்டு பேரோட நீங்களும் ஐக்கியமாயிடுங்கடா" ன்னு...
கடைசியில்..கையிலிருந்த காசெல்லாம் கரைத்து விட்டு.. ஞாயிறு இரவு..சென்னைக்கு வந்து சேர்ந்தார்கள்..

நானும், மாற்ற நண்பர்களும், இவர்களை வீட்டு வாசலிலேயே நிறுத்தி குளிக்காமல் எந்த நாதாரி நாயும் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சத்தம் போட்டு விட்டு.. நண்பரின் அண்ணனை தேடினோம்...அவர், already எஸ்கேப்..ஆகிவிட.. பின்னர் ஒருநாள் அவருக்கு பூசை வைத்துக்கொள்ளலாம் என்று..விட்டு விட்டோம்.
ஆக மொத்தம்.. இந்த ௫ Men Army யின் members அத்தனை பேரும் இன்று அரசு பணியில் இருப்பது தான் சிறப்பு அம்சம்.. (அதான் யார் பேரையும் நான் போடலை..)

இந்த பதிவுகளோட நீதி என்னன்னா.. ஆசை பட்டு கூட ஆந்திரா பக்கம் போயிடாதீங்க... பாஷை தெரியாம , சமாளிக்க முடியாம மாட்டிகிட்டீங்கன்னா.. சங்கு தான்..!!!

பின் குறிப்பு : இன்னமும் சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்ததாக ஒரு மெம்பெர் கூறினார்.. கொஞ்சம் ஓவர் கிளு கிளுப்பா இருந்ததனால்..எழுதலை...

2 comments:

துளசி கோபால் said...

அவுனு அவுனு ஆந்திராப் பக்கம் போவொத்து. இப்புடு அன்னீ தமிழ்நாட்டுலேயே தொருக்குத்தாதி காதா? :-))))

கிரி said...

//நானும், மாற்ற நண்பர்களும், இவர்களை வீட்டு வாசலிலேயே நிறுத்தி குளிக்காமல் எந்த நாதாரி நாயும் வீட்டுக்குள் நுழையக்கூடாது என்று சத்தம் போட்டு விட்டு.. நண்பரின் அண்ணனை தேடினோம்...அவர், already எஸ்கேப்..ஆகிவிட.. பின்னர் ஒருநாள் அவருக்கு பூசை வைத்துக்கொள்ளலாம் என்று..விட்டு விட்டோம்.//

சரி உங்கள பத்தி எதுவும் சொல்ல வில்லையே, நான் கூட வெங்கி எதாவது கிளுகிளுப்பா செய்து இருப்பாரு, மாட்டி தர்ம அடி வாங்குனாரோன்னு நினைத்தேன் :-)))))

//ஆசை பட்டு கூட ஆந்திரா பக்கம் போயிடாதீங்க... பாஷை தெரியாம , சமாளிக்க முடியாம மாட்டிகிட்டீங்கன்னா//

காவலர்கள் கிட்ட தான் மொழி தெரியலைனா பிரச்சனை ஹீ ஹீ ஹீ குஜிலிங்க கிட்ட பிரச்சனை இல்லைன்னு நினைக்கிறேன்...;-) இது ஒண்ணுக்கு தான் எந்த மொழியும் இல்லை ஹீ ஹீ ஹீ

//இன்னமும் சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்ததாக ஒரு மெம்பெர் கூறினார்.. கொஞ்சம் ஓவர் கிளு கிளுப்பா இருந்ததனால்..எழுதலை...//

வெங்கி அதை என்கிட்டே தனியா சொல்லுங்க ..:-)))))