Thursday, 19 June 2008

பெட்ரோல் விலை இந்தியா வில் குறைவே !!

ஆமாங்க.. இந்தியாவில பெட்ரோல் விலை குறைவு தாங்க.. நாம அன்றாடம்பயன் படுத்துற இதர பொருட்கள் விலையோட ஒப்பிட்டு பாருங்க.. தெரியும்.. ஒருசின்ன ஒப்பிடல் கீழே !


  • கோகோ கோலா 330 மில்லி கேன் = 20 ரூ (லிட்டர் 61 ரூ ??)
  • டெட்டோல் 100 மில்லி பாட்டில் = 20 ரூ (லிட்டர் 200 ரூ ??)
  • பான்டீன் ஷாம்பூ 400 மில்லி பாட்டில் = 165 ரூ (லிட்டர் 413 ரூ ??)
  • வாய் கழுவி (Listerene) 100 மில்லி = 45 ரூ (லிட்டர் 450 ரூ ??)
  • காபி 100 மில்லி (ஒரு நல்ல ஹோட்டல் ல்ல ) = 20 ரூ (லிட்டர் 200 ரூ ??)
  • after shave lotion (ஓல்ட் ஸ்பைஸ் ) 100 மில்லி பாட்டில் = 175 ரூ (லிட்டர் 1750ரூ ??)

இப்ப வாங்க அப்பு .. இது தான் சூப்பர் ஆப்பு..

கம்ப்யூட்டர் கலர் பிரிண்டர் இங்க் இருக்கு இல்ல (HP Deskjet)
அது க்கு உபயோக படுற 21 மில்லி இங்க் cartridge = 1900 ரூ (லிட்டர் 90476 ரூ ??)

இத விட சூப்பர் பகல் கொள்ளை யை நீங்க பாத்து இருக்கீங்களா ??

இப்போ பெட்ரோல் விலைய பாருங்க..
பெட்ரோல் லிட்டர் ரூ 52
டீசல் லிட்டர் ரூ 37..

பெட்ரோல் விலை கம்மின்னு ஒத்துக்கறீங்களா ??

4 comments:

கிரி said...

ஒத்துகொள்கிறேன் :-))))

புதுகை.அப்துல்லா said...

அண்ணே! இவ்வளவு பெரிய சிந்தனைய சும்மா யோசிச்சிங்களா? இல்ல ரூம் போட்டு யோசிச்சீங்களா?
ஒரு ஜென்ரல் நாலேட்ஜீக்கு கேக்குறேன்!

வெங்க்கி said...

வாங்க அப்துல்லா பாய்.!! ஒரு நண்பர் அனுப்பின மெயில் ஐ அப்படியே பதிவா மாத்தி சுட்டுட்டேன்.. நமக்கு ரூம் போட்டு எழுதுற அளவுக்கு இன்னமும் முத்தல.. தெளிவா தான் இருக்கேன் :))

மேட்டர் என்னவோ உண்மை தான..ஒத்துக்குறீங்குளா ??

புதுகை.அப்துல்லா said...

இதுல சந்தேகம் வேறயா? சத்தியமா உண்மைதான்.