Monday, 23 June 2008

ஜகர்தா வா இல்ல ஜாலி கர்தாவா ? பாகம் - 2

இரண்டாம் பாகத்துக்கு வருகிறேன்.. இதில் முதல் பாயிண்ட் ஆனா "டாலர் சம்பளம்" பற்றி சற்றே விபரமாக பேசுவோமே..

விஷயத்துக்கு போவதற்கு முன் சில நாணய மதிப்புகளை பார்ப்போம்.. (ஒரு குத்து மதிப்பாக தான்)

1 USD = 10,000 இந்தோனேசியா ரூபியா (கிட்ட தட்ட )
1 INR = 225 இந்தோனேசியா ரூபியா (கிட்ட தட்ட)

சரியான நாணய மதிப்பிற்கு இங்கே கிளிக்கி பின்னர் சென்று பாருங்கள்..
இந்தோனேசியாவில் வங்கிகள் செயல் பாடு பற்றி சிறு குறிப்பு:

ஓகே.. முதலில் உங்களுக்கு சம்பளம் அமெரிக்க டாலர் களில் தான் பேசப்படும்.. ஏனைய தூரக்கிழக்கு நாடுகளாகிய சிங்கப்பூர், மலேசியா போன்றவற்றில்அந்ததந்த நாட்டு கரன்சி களில் சம்பளம் வழங்கப்படுவது போல இந்தோனேசியாவில் கிடையாது.. வங்கிகளில் கூட நீங்கள் இரண்டு விதமானகணக்குகளை திறந்து கொள்ளலாம்..ஒன்று உள்ளூர் ரூபியாவில் , மற்றொன்றுUSD (அதாவது அமெரிக்க டாலர் ல்) ..ரூபியாவில் கணக்கு திறந்தால் கையில்கத்தை கத்தை யாக எடுத்துக்கொண்டு திரிய வேண்டி இருக்கும்.. ATM வசதிகள்மற்றும், வங்கி வசதிகள் இந்தோனேசியாவில் இந்தியா வை விட ஒரு படி மேல்.. எல்லா வங்கிகளும் computerised, இன்டர்நெட்-பாங்கிங், வெளிநாட்டு Money-Transfer எல்லாம் சிறப்பாகவே இருக்கின்றன..மேலும், வங்கிகள் திங்கள் முதல்வெள்ளி வரை மட்டுமே.. சனி, ஞாயிறு லீவு..

இப்போ சம்பள விஷயத்துக்கு வருவோம்..

உங்களை வேலைக்கு எடுக்கும் கம்பெனி..உங்களுக்கு இரண்டு வேலை அனுமதி கடிதம் (Appointment Letter) கொடுப்பார்கள்.. இதில் உங்கள் சம்பளம் இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் .. அதாவது.. 60:40 அல்லது 50:50 என்ற விகிதத்தில் .. (விகிதத்தை நீங்கள் கூட அவர்களுக்கு பரிந்துரைக்கலாம்) இதற்குள் ஒரு சின்ன உள் குத்தும் உண்டு.. (நமக்கு இல்லை)

உங்களின் வெளிநாட்டு வங்கி கணக்கு எண்ணை (NRI அக்கௌன்ட் எண்) அவர்கள் கேட்டு பெற்றுக்கொள்வார்கள்..(தைர்யமாக கொடுக்கலாம்) அதில் பிரதி மாதம் சம்பள தேதியன்று.. நீங்கள் பரிந்துரைத்த விகிதத்தின் படி உங்கள் சம்பளம் உங்களின் NRI வெளிநாட்டு கணக்கில் சென்று விடும்..(வங்கி கமிஷன் கூட அவர்களே கட்டி விடுவார்கள்) இந்த அமௌன்ட் உங்களின் முதல் வேலை அனுமதி கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.. இது உங்களுக்கும் கம்பெனி க்கு மட்டுமே உள்ள ரகசியம்..

இரண்டாவதாக, மீதமுள்ள அமௌன்ட் உங்கள் உள்ளூர் கணக்கில் (இந்தோனேசிய வங்கியில்) டாலர் ஆக டெபொசிட் செய்யப்படும்.. அதை நீங்கள்.. டாலர் ஆகவோ அல்லது இந்தோனேசியா ரூபியாவாகவோ எடுத்துக்கொள்ளலாம்..

இதில் உள்குத்து என்னவென்றால், இரண்டாவதாக உங்களுக்கு அளிக்கப்படும் வேலை அனுமதி கடிதம் தான் இந்தோனேசியா அரசாங்கத்திற்கு அளிக்கப்படுவது.. (அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை தான்.. இந்தோனேசியா அதற்க்கு பேர் போனது தானே !! :)) ) அந்த கடிதத்தில் மீதமுள்ள சம்பளம் உங்கள் சம்பளமாக குறிப்பிடப்பட்டிருக்கும்..அதாவது உங்களுக்கு பேசிய சம்பளத்தில் கிட்டதட்ட பாதியை தான் அவர்கள் அரசாங்க வருமான வரிக்கு கண்க்க்கிட்டுக்கொள்வார்கள்.. மீதம் காந்தி கணக்கு..(அவர்களை பொறுத்த மட்டில் ).. ஆனால் நமக்கு சேர வேண்டியது சரியாக போய் விடும்.. (So, no worries !!)

இந்தோனேசியாவில் எண்ணெய் நிறுவனங்கள், கனிம நிறுவனங்கள், வங்கி சேவைகள் இவற்றிற்கு இந்தியர்கள் தேவைப்படுவதால்.. அங்கே இந்தியர்கள் அதிகம் வேலை பார்க்கிறார்கள்..

எனவே.. இந்தோனேசியாவில் வேலை என்றால் தயங்க வேண்டாம் .. சூப்பர் offer என்றால் ஒத்துக்கொள்ளுங்கள்..

உங்கள் கருத்துக்கள், கேள்விகளை பினூட்டமாக இடுங்கள்.. பதில் தருகிறேன்..

---அடுத்த வாரம்..பார்ப்போமே..

3 comments:

துளசி கோபால் said...

அட! இதுதான் விஷயமா? நம்ம நண்பர் மனைவி எப்போதும் நாங்க ஜகர்த்தாலே இருந்தப்போ.....ன்னு ஆரம்பிப்பாங்க.

பாவம் நண்பர் இப்ப இவ்வுலகில் இல்லை(-:

வெங்க்கி said...

வாங்க டீச்சர் !!

இந்தோனேசியாவில் இந்தியர்கள் பல பேர் 15 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்து வசித்து வருபவர்களும் இருக்கிறார்கள்..

அங்கே., மருத்துவ செலவுகள் தான் அதிகம்.. மற்றபடி ஏதும் கிடையாது.. பல நிறுவனங்கள் வருடத்துக்கு $2000 என (கும்ஸ் ஆ தான்).. மருத்துவ படி கொடுத்து விடுவார்கள்..

உங்கள் நண்பர் பற்றி வருத்தம் தான்..

ஜகர்தா வாழ்க்கை யை யாரும் மறக்க மாட்டார்கள்.. இந்தோனேசியர்கள் உபசரிப்புக்கு பேர் போனவர்கள்.. நாம் அடிக்கடி கூறும் "அதிதி தேவோ பவ - விருந்தினர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்" (இது தானே நம்ம Indian tourism ஓட caption ??)

கிரி said...

வெங்கி நான் அங்கே போய் இருந்த போது 100000 கொடுத்து கோ-கார்ட் விளையாடினேன், பொம்மை 15000 க்கு வாங்கினேன். என் கேட்கறீங்க? செம காமெடி.

டீலிங் எல்லாம் லேக் ல தான் ..அங்கே போய் பெரிய பணக்காரன் ஆகிட்டேன்..

எனக்கு அங்கே சென்ற பிறகு தான்,வெளிநாட்டு பயணிகள் நம் ஊருக்கு வரும் போது என் இப்படி செலவு செய்கிறார்கள் என்று புரிந்தது..அங்கே சிங்கப்பூர் டாலர் 2 டாலர் கொடுத்தாலே நம்மை அதிசயமாக பார்க்கிறார்கள்.

அங்கே 100000 லேக் பணம் எல்லாம் பார்த்து அதிசயித்து போய் விட்டேன்.

பின் குறிப்பு.

உங்களுக்கு முதலில் வந்து இருக்கும் பின்னூட்டங்கள் ஸ்பாம், அதை போல் வந்தால் அனுமதிக்காதீர்கள்.